பாலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்குவது அவ்வளவு சுலபமல்ல. பிரபலம் ஆக வேண்டும் என்றால் நடிகர், நடிகைகள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டும். திரைத்துறையில் குறிப்பாக நடிகைகள் கொஞ்சமாவது கிளாமராக நடித்தால் தான் தங்கள் இடத்தை தக்க வைத்துகொள்ள என்ற நிலை உருவாகி இருபது துர்ஷ்டவசமே ஆகும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்படி ஒரு நிலை ஹிந்தி நடிகை ஷில்பா சுக்லாவுக்கு நேரிட்டது. அவர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் உடன் சேர்ந்து நடித்த "சக் தே இண்டியா" கதாபாத்திரம் அவ்வளவாகா பேசப்படவில்லை. ஆனால் பி.ஏ. பாஸ் போன்ற படங்களில் நடித்ததால் அவர் பிரபலம் அடைந்தார்.


இன்று ஷில்பா சுக்லாவுக்கு பிறந்தநாள், அவர் பற்றி சுவாரசியமான விஷயங்களை பார்ப்போம்!!


1. ஷில்லா சுக்லா 1982-ம் ஆண்டு பிப்ரவரி 22 ஆம் தேதி பீகார் வைசாலி மாவட்டத்தில் பிறந்தார். அவரது தந்தை என்.கே. சுக்லா மற்றும் அம்மா நமிதா சுக்லா ஆகியோர் அரசாங்க ஊழியர்கள் ஆவார்கள்.


2. ஷில்பாவின் ஆரம்ப கல்வி வைஷாலியில் பயின்றார். பின்னர், அவரது குடும்பம் தில்லிக்கு இடம் பெயர்ந்ததால், டெல்லியில் உள்ள டிபிஎஸ் பள்ளியில் படிப்பை தொடர்ந்தார். டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு மற்றும் முதுகலை பட்டம் முடித்தார்.



3. தனது 16 வயதிலிருந்து ஷில்பா மாடலிங் செய்யத் தொடங்கினார். அவர் சில விளம்பரங்களிலும் மற்றும் தொலைக்காட்சி தொடர்களிலும் பணிபுரிந்தார். பின்னர் சில படங்களில் சிறு சிறு பாத்திரங்களும் கிடைத்தன.


4. 2003-இல் கமோஷ் பாணி (Khamosh Pani) திரைப்படத்தில் ஷில்பா ஒரு ஆற்றல் மிக்க பாத்திரத்தில் நடித்தார். 



5. 2007-ல் ஹாக்கி விளையாட்டை மையமாக கொண்டு வெளியான "சக் தே இந்தியா" என்ற படத்தில் நடித்தார். இந்த படம் இவருக்கு முக்கிய படமாக அமைந்தது. இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தில் ஷில்பாவுக்கு சிறந்த சப்போர்டிங் நடிகைக்கான ஸ்க்ரீன் விருது கிடைத்தது.


6. அதன்பின் ஷில்பா நடித்த இரண்டு படங்கள் பெரிதாக ஓடவில்லை. 2013-ம் ஆண்டு வெளியான பி.ஏ. பாஸ் திரைப்படத்தில் ஷில்பா 12 வயதான வாலிபனுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்தார். இப்படம் வெற்றிகரமாக ஓடியது.



7. பி.ஏ. பாஸ் திரைப்படத்தில் ஷில்பா அவருக்கான பாத்திரத்தை நன்றாக நடித்தார் என்பதில் சந்தேகமே இல்லை. இதற்காக அவருக்கு பாராட்டிக்கள் குவிந்தது. 


8. பி.ஏ. பாஸ் படத்திற்கு ஷில்பா சிறந்த நடிகைக்கான ஃபிலிம்பேர் கிரிடிக்ஸ் விருது கிடைத்தது. மேலும் சிறந்த நடிகைக்கான நெகடிவ் கதாபாத்திரத்துக்கான ஸ்க்ரீன் விருதும் கிடைத்தது.



9. பி.ஏ. பாஸ், சக் தே இந்தியா, பிந்தி பஜார், கிரேசி கக்கட் பேமிலி, ராஜ்தானி எக்ஸ்பிரஸ், கமோஷ் பாணி மற்றும் பல படங்களில் ஷில்பா நடித்துள்ளார்.


10. இதேபோல பல தொலைக்காட்சி தொடர்களும் ஷில்பா பணிபுரிந்துள்ளார். குறும்பு படத்திலும் நடித்துள்ளார். இன்று அவருக்கு பிறந்த நாள் அவரை வாழ்த்துவோம்.