பாஜக வேட்பாளர் நடிகை ஹேமாமாலினி வயல்பகுதியில் அறுவடை செய்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 18 வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் தங்களின் ஆட்சியை கைப்பற்ற அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர பிரச்சரம் செய்து வருகிறது. இந்நிலையில், மதுரா தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரான நடிகை ஹேமாமாலினி வயல்பகுதியில் அறுவடை செய்துக் கொண்டிருந்த உழைக்கும் பெண்களை சந்தித்து வாக்கு சேகரித்த ஹேமா மாலினி தாமும் வயல்காட்டில் இறங்கி அறுத்த கோதுமை கதிர்களை கைமாற்ற உதவி செய்த சம்பவம் அனைவரையும் கவர்ந்துள்ளது. 


மதுரா தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரான நடிகை ஹேமாமாலினி கடந்த இரண்டு நாட்களாக தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், இந்த சம்பவம் விவசாயிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஒரு நடிகையும் தங்களுடன் வயலில் வேலை செய்ததைப் பார்த்து அப்பகுதி விவசாயிகள் வியப்படைந்தனர். 



மதுரா தொகுதியில் மக்களவைத் தேர்தலில் 2014 ஆம் ஆண்டில், ராஷ்டிரிய லோக் டால் வேட்பாளர் ஜெயந்த் சவுதரியை உறுதியாக தோற்கடித்தார்.


ஹேமாமாலினி 2004 ஆம் ஆண்டு BJP-ல் சேர்ந்தார். இப்போது மதுரா மக்களுக்கு வரவிருக்கும் தேர்தலில் சாதகமான முடிவை எட்டுவதற்காக ஒரு நடிகையாக பிரபலமடைந்தார். கடந்த ஐந்து ஆண்டுகளில் 34.46 கோடி ரூபாய் அதிகரித்து ரூ. 101 கோடி மதிப்பிலான சொத்துக்களை அவர் அறிவித்துள்ளார்.


மதுரா தொகுதியில் இரண்டாவது கட்டமாக தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.