சண்ட போடாம சாப்பிடணும் பங்கு.. சோறு முக்கியம்: கோழிக்கு குரங்கின் அட்வைஸ், வைரல் வீடியோ
Funny Viral Video: ஒரு குரங்கும் கோழியும் உணவுக்காக போடும் கியூட் சண்டையும் அதன் பின் நடக்கும் சுவாரசியமான விஷயமும் வைரலாக பரவி வருகிறது.
வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.
விலங்குகளின் வீடியோக்கள் பல சமயம் நம்மை வியக்க வைக்கின்றன. இப்படி கூட நடக்குமா என நாம் ஆச்சரியப்படுகிறோம். ஆனால், கண் முன்னால் வீடியோவில் பார்க்கும் விஷயங்களை எப்படி நம்பாமல் இருப்பது? ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் ஸ்க்ரோல் செய்யும் போது, நம் கண்ணில் படும் சில வீடியோக்கள் நம் மனதை மிகவும் மகிழ்விக்கின்றன. அதுவும் விலங்குகள் மற்றும் பறவைகளின் வீடியோக்கள் என்றால் கேட்கவே வேண்டாம்.
விலங்குகள் மற்றும் பறவைகளின் வீடியோக்களைப் பகிர்வதற்கென சமூக ஊடகங்களில் சில பிரத்யேக பக்கங்கள் உள்ளன. அப்படிப்பட்ட பக்கங்களைப் பார்த்தால் நமக்கு நேரம் போவதே தெரியாது. இணையத்தில் சிங்கம், புலி, குரங்கு, பாம்பு, நாய், பூனை ஆகிய மிருகங்களுக்கு அதிக மவுசு இருந்தாலும், குரங்குகள் இணையத்தின் ஹீரோக்கள் என்றே சொல்லலாம். குரங்குகளின் குறும்பு வீடியோக்கள் தினம் தினம் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவும் அப்படித்தான் உள்ளது.
மேலும் படிக்க | தீனி போட வந்தவரை தீனியாக்க பார்த்த முதலை வீடியோ வைரல்
குரங்கும் கோழியும்
இந்த வீடியோ தொடங்கும் போது, ஒரு குரங்கு நாற்காலியில் அமர்ந்து ஒரு தட்டில் இருந்து எதையோ சாப்பிட்டுக்கொண்டு இருப்பதை காண முடிகின்றது. அதன் எதிரே ஒரு கோழி நிற்கிறது. அது குரங்கின் கையிலிருந்து உணவைப் பறித்து சாப்பிடுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த குரங்கு கோழியின் வாயிலிருந்து உணவை பிடுங்கப்பார்க்கிறது. ஆனால் அது முடியவில்லை. அதன் பிறகு கோழி உணவை பிடுங்க முயற்சிக்கவில்லை. எனினும் குரங்கு ஒவ்வொரு பிடியை எடுத்து சாப்பிடும்போதும், ‘வேண்டுமானால் எடுத்துக்கொள்’ என்பது போல குரங்குக்கு காட்டிவிட்டு சாப்பிடுகிறது. குரங்குக்கும் கோழிக்கும் இடையிலான இந்த கியூட் நிகழ்வு பார்ப்பதற்கு மிக வேடிக்கையாகவும் அழகாகவும் இருக்கிறது. இந்த வீடியோவை பார்க்கும் போது பறித்து உண்ணும் புத்திசாலித்தனம் மனிதர்களுக்கு மட்டுமின்றி மிருகங்களுக்கும் உள்ளதா என்று ஆச்சரியம் தோன்றுகிறது.
குரங்கு கோழி கியூட் வீடியோவை இங்கே காணலாம்:
வீடியோ இணையத்தில் வைரல் ஆனது
இந்த வீடியோ சமூக ஊடக தளமான ட்விட்டரில் @AMAZlNGNATURE என்ற பக்கத்தில் பகிரப்பட்டது. இந்த வீடியோவை ஏற்கனவே 9 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். 1 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த வீடியோவை லைக் செய்துள்ளனர். 850 -க்கும் மேற்பட்ட இணையவாசிகள் இதற்கு கருத்து தெரிவித்துள்ளனர். குரங்குக்கும் கோழிக்கும் இடையில் உள்ள புரிதலை பலர் பாராட்டி வருகிறார்கள்.
(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)
மேலும் படிக்க | சீண்டினா சின்னாபின்னாக்கிடுவேன்! ஆக்ஷனுக்கு ரியாக்ஷன் கொடுக்கும் முதலை வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ