Mr Local படத்தின் Nee Nenacha பாடல் லிரிக் வீடியோ வெளியீடு
சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள ‘மிஸ்டர்.லோக்கல்’ படத்தில் இடம்பெற்றுள்ள Nee Nenacha பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி உள்ளது.
சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள ‘மிஸ்டர்.லோக்கல்’ படத்தில் இடம்பெற்றுள்ள Nee Nenacha பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி உள்ளது.
இயக்கநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘மிஸ்டர்.லோக்கல்’. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு உள்ளிட்டோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே,இ.ஞானவேல்ராஜா தயாரித்துள்ள இந்த படம் வரும் மே 17-ஆம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ‘ஹிப் ஹாப்’ தமிழா ஆதி இசையமைக்கிறார்.
காதல் கலந்த காமெடி படமாக உருவாகி இருக்கும் இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள Nee Nenacha பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த மாதம் திரைக்கு வரும் இப்படத்திற்கு தனிக்கை குழு U சான்றிதழ் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.