கோவையைச் சேர்ந்த முன்னனி இசையமைப்பாளரான ஹிப் ஹாப் ஆதி தமிழில் தனிஒருவன்,கவன்,அரண்மனை-2 போன்ற படங்ளுக்கு இசையமைத்திருக்கிறார்.மீசையை முறுக்கு என்ற படத்தில் கதநாயகனாக அறிமுகமானார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இசையமைப்பாளர் மற்றும் நடிகருமான ஹிப் ஹாப் ஆதிக்கு திருப்பதியில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிச்சயதார்த்தம், இரு குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மத்தியில் நேற்று திருப்பதியில் நடந்துள்ளது. இந்நிலையில் திடீரென நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளதால் பலரும் புகைப்படங்களை முன்வைத்து ஹிப்ஹாப் தமிழாவுக்குத் திருமணம் நடைபெற்றுள்ளதாகவும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துவருகிறார்கள்.