உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 2011-ல் ரோகித் ஷர்மா-விற்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. ஆனால் இந்த ஏமாற்றம் அவரை எந்த நிலைக்கு கொண்டுவந்துள்ளது தெரியுமா? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடைப்பெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோகித் ஷர்மா தனது கனவுகளை நினைவாக்கி வருகின்றார். நடப்பு தொடரில் இதுவரை விளையாடிய போட்டிகளில் நான்கு சதங்களை அடித்துள்ளார். உலக கோப்பை தொடர் நடத்துனர் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அவரது சதம் பயனற்ற நிலையில்., தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டி, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிரான போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.


செவ்வாயன்று பர்மிங்காமில் எட்க்பாஸ்டனில் நடைப்பெற்ற போட்டியில் ஹிட்மேன் ரோகித் ஷர்மா 92 பந்துகளில் 104 ரன்கள் குவித்தார். இது மென் இன் ப்ளூவின் அரையிறுதி இடத்தை உறுதி செய்தது. 



மேலும் இச்சதத்தின் மூலம் ஒரே உலகக் கோப்பையில் நான்கு சதங்களை பதிவு செய்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றார். குமார் சங்கக்கார மற்றும் ரிக்கி பாண்டிங் போன்ற பிற நாட்டு வீரர்களை தவிர்த்து, ஒட்டுமொத்த போட்டிகளில் ஐந்து சதங்கள் பதிவு செய்த வீரர் (சச்சின் டெண்டுல்கருக்குப் பின்னால்) என்னும் பெருமையினையும் பெற்றுள்ளார்.


மேலும், 32 வயதான இவர் தற்போதைய உலக கோப்பை தொடரில் 544 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.


இந்திய துணை கேப்டன் தனது பேட்டால் தற்போது பேசி வருகின்றார். எனினும் கடந்த 2011-ஆம் ஆண்டு அவருக்கு இவ்வாறு அமைந்துவிட வில்லை. குறிப்பிட்ட அந்த ஆண்டில் வெளிவந்த இந்திய உலக கோப்பை தொடருக்கான அணியில் அவர் இடம்பெறவில்லை. அவருக்கு கிடைத்த ஏமாற்றம் கிரிக்கெட்டை விட்டே வெளியாறி விடலாம் என்ற விரக்திக்கு அவரை கொண்டு சென்றது. காலம் காயங்களை ஆற்றும் அல்லவா., காலங்கள் சென்றது., 2015 உலக கோப்பை தொடருக்கான அணியில் இடம் பிடித்தார். இந்த பதிப்பில் இரண்டு அரைசதங்கள் மற்றும் ஒரு சதம் என எட்டு போட்டிகளில் 330 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து நடப்பு தொடரில் இந்தியாவின் முதுகெலும்பாய் உருவெடுத்துள்ளார்...


எனினும் அவரது 2011-ஆம் ஆண்டின் ஏமாற்றம்?... ரோகித் ஷர்மாவின் ஏமாற்றம் அவரது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக உலகம் அறிந்தது. இந்த ட்வீட் தற்போது அம்பத்தி ராயுடுவின் விலகலுக்கு பின்னர் இணையத்தில் வைரலாகி வருகின்றது.


நடப்பு உலக கோப்பை தொடரில் அம்பத்தி ராயுடுவிற்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்ட நிலையில், அவர் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் விடை பெறுவதாக அறிவித்தார். அம்பத்தி ராயுடுவின் முடிவு பலருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சிலர் தற்போது ரோகித் ஷர்மாவின் ட்விட்டர் பதிவை மேற்கொள் காட்டி, அம்பத்தி ராயுடுவின் முடிவை எதிர்த்து வருகின்றனர்.