பறவைகள் உலகம் மிகவும் அற்புதமானது. பறவைகளை பார்க்கும் போதே நமது மனதில் உற்சாகம் தொற்றிக் கொள்ளும். அதிலும் சின்னஞ்சிறிய அழகிய பறவைகள் என்றால் கேட்கவே வேண்டாம். நம்மில் பலருக்கு பறவைகளுக்கு உணவு தண்ணீர் வைக்கும் பழக்கம் உள்ளது. அதிலும் கோடை காலங்களில் கூடுதலாக பறவைகளுக்கு தண்ணீர் வைப்பதை நம்மில் பலர் வழக்கமாக கொண்டிருப்போம். அதனை உதவியாக இல்லாமல் நமது கடமை என்று செய்யும் பல மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். மனிதர்கள் இல்லாமல் பறவைகள் வாழும். ஆனால் பறவைகள் இல்லாமல் மனிதனால் வாழ முடியாது. ஆனால் இந்த உண்மை பலருக்கு புரிவதில்லை. பறவைகளை நேசிக்கும் மனிதர்களுக்கு மத்தியில், பறவைகளை சித்திரவதை செய்யும் நபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த வகையில் சின்னஞ்சிறிய பறவை ஒன்றை ஒருவர் சித்திரவதை செய்யும் வீடியோ ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மனித மிருகம் ஒன்று சின்னஞ்சிறிய பறவையை சித்திரவதை செய்யும் வீடியோவை கீழே காணலாம். அழகிய மனம் கொண்டவர்கள் அதனை பார்க்க வேண்டாம். ஆனாலும் அந்த நபருக்கு சரியான தண்டனை கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த வீடியோ வைரல் ஆவதும் முக்கியம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.


மனித மிருகம் சின்னஞ்சிறிய பறவையை சித்திரவதை செய்யும் வீடியோ:



மனதை மிகவும் வருத்தப்பட செய்யும் இந்த வீடியோவை சுஷாந்தா நந்தா என்ற வனத்துறை அதிகாரி பகிர்ந்துள்ளார். மேலும் கொடுமைப்படுத்திய அந்த நபர், வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  இந்த வீடியோவை பார்த்து பலர் மிகவும் அதிர்ச்சியுடன் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இது போன்ற மனித மிருகங்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். வைரல் வீடியோவில் காணப்படும் சின்னசிறு பறவை ஒரு அரிய பறவை போல் தெரிகிறது. அந்த அழகிய பறவையை பார்த்தால் அனைவருக்குமே நிச்சயம் ரசித்த தான் தோன்றும். ஆனால்,  வீடியோவில் காணப்படும் அந்த நபருக்கு எப்படி சித்திஒரவதை செய்ய மனம் வந்ததோ என பலரும் கடுமையாக கருத்துக்களை பதிவு செர்ய்து வருகின்றனர்.


மேலும் படிக்க | ’பிறவி அதிசயம்’ மூன்று ராட்சத கொம்புகளை கொண்ட கிடா - வைரல் வீடியோ


இணைய உலகம் நமக்கு எண்ணற்ற தகவல்களை தருகிறது. பல விஷயங்களை அம்பலப்படுத்துகிறது. சில அதிர்ச்சியூட்டும் காட்சிகளையும் காணலாஅம். அதே சமயத்தில், காணக் கிடைக்காத பல அரிய விஷயங்களை, காட்சிகளை இங்கே கண்டு களிக்கலாம். அவை சில சமயங்களில் அதிர்ச்சியூட்டுவதாகவும், சில சமயங்களில் வியப்பை ஊட்டுவதாகவும், சில சமயங்களில் நமக்கு  சிரிப்பை வரவழைப்பதாகவும்  இருக்கும். சமூக ஊடகத்தில் விலங்குகள், குறிப்பாக பறவைகள் பாம்புகள் தொடர்பான வீடியோக்கள் மிகவும் வைரலாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 


(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)


மேலும் படிக்க | ’நல்லி எழும்பா இருந்தா நல்லா இருந்திருக்கும்’ எலும்பை ரசித்து சுவைத்து சாப்பிடும் ஒட்டகச் சிவிங்கி - வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ