கொரோனா வைரஸ் பரவலுக்குப் பிறகு ஐடி நிறுவனங்கள் உள்ளிட்டவை, ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்ய அனுமதித்துள்ளனர். இதனால், கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஊழியர்கள் கம்பெனி பக்கம் எட்டிக்கூட பார்க்காமல் வீட்டில் இருந்தபடியே வேலை செய்து வருகின்றனர். சில நிறுவனங்கள் வீடியோ கால் அல்லது ஜூம் செயலி வழியாக ஊழியர்களை கண்காணித்தாலும், புதுமையான ஐடியாக்களை பயன்படுத்தி ஊழியர்கள் வேலையை ஸ்மார்ட்டாக செய்து வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | Viral Video: 'நமக்கு சோறு முக்கியம்; மணமகன் வெயிட் பண்ணலாம்’; அசத்தும் மணமகள்!


இந்நிலையில், வீட்டில் இருந்து வேலை பார்க்கும் ஐடி ஊழியர்கள் ஒருவர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சுமார் ஒரு ஆண்டாக வேலை செய்யாமல் 66 லட்சம் ஊதியம் பெற்றுள்ளார். இதுகுறித்து ரெட்டிட் தளத்தில் அவர் எழுதியுள்ள பதிவில், ஹார்ட் வொர்கிற்கு பதில் ஸ்மார்ட் வொர்க் எப்போதும் கைகொடுக்கும் என கூறி, தான் பின்பற்றிய டெக்னிக்கையும் தெரிவித்துள்ளார். அதாவது, automated process டெக்னாலஜியை பயன்படுத்தி ஸ்மார்டாக தன்னுடைய வேலை செய்து வந்துள்ளார்.


தினமும் 10 நிமிடம் அதற்காக செலவழித்து அன்றைய நாள் வேலை செய்து வந்ததாக அவர் கூறியுள்ளார். சட்ட நிறுவனம் ஒன்றில் ஆவணங்களை கிளவுட் பேஸ்டாக மாற்றி பாதுகாப்பது தான் அவருடைய வேலையாக இருந்துள்ளது. அதற்காக ஆட்டோமேட்டேட் புரோசஸ் டெக்னாலஜியை பயன்படுத்திக் கொண்ட அவர், காலை முதல் மாலை வரை வீடியோ கேம் விளையாடுவது, படம் பார்ப்பது போன்ற பொழுதுபோக்கு வேலைகளை செய்து வந்துள்ளார். ஆனால், அவருடைய வேலை முறையாக நடந்து மாத சம்பளமும் தவறாமல் வந்துள்ளது. இந்தப் பதிவை பார்த்த நெட்டிசன்கள் வாயடைத்து போயுள்ளனர். ஸ்மார்ட்டாக வேலை செய்த அவருக்கும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.


ALSO READ | தனது அழகான மணமகளைப் பார்த்து 'out of control' ஆன மணமகன் செய்த காரியம்: வைரல் வீடியோ


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR