கொரோனாவை தடுக்க கையுறைகளை அணிந்திருந்தாலும் கொரோனா வைரஸ் எவ்வாறு குறுக்கு மாசு மூலம் பரவுகிறது என்பதை செவலியர் ஒருவர் விளக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா வைரஸ் என்பது என்ன? அது எப்படி பரவுகிறது என மக்கள் சமூக ஊடகங்களில் பேசி வருகின்றனர். மேலும் தொற்றுநோய் தொடர்பான கட்டு கதைகள் மற்றும் வீடியோக்கள் ஒவ்வொரு நாளும் வைரலாகின்றன.


இந்நிலையில் கொரோனாவில் இருந்த தப்பிக்க நீங்கள் ஒரு ஜோடி கையுறைகளை அணிந்திருந்தாலும் கூட, கொரோனா வைரஸ் குறுக்கு மாசுபாட்டின் மூலம் எவ்வாறு பரவுகிறது என்பதை ஒரு செவிலியர் விளக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



அமெரிக்காவை தளமாகக் கொண்ட நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (DCD) குறுக்கு-மாசுபாட்டை ஒரு மேற்பரப்பில் இருந்து மற்றொரு மேற்பரப்பில் தொடர்பு மூலம் பரவுவதாக வரையறுக்கிறது. 3 நிமிடங்களுக்கும் மேலான இந்த வீடியோவில், செவிலியர் மோலி லிக்ஸி கூறுகையில், “நான் இப்போது பொதுவில் கையுறைகளை அணிந்துகொண்டு நிறைய பேரைப் பார்க்கிறேன். நீங்களும் கையுறைகளை அணிய விரும்பினால், அது நல்லது தான். ஆனால் இந்த நிலையில் குறுக்கு-மாசுபாடு என்று ஒரு சிறிய விஷயத்தை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.” என கூறி வைரஸ் பரவுதல் குறித்து விளக்குகிறார் அவர்.


சில வண்ணப்பூச்சுகளின் உதவியுடன் வைரஸ் எவ்வாறு பரவுகிறது என்பதை செவிலியர் விளக்குகிறார். சோப்புடன் ஓடும் நீரின் கீழ் ஒருவர் வழக்கமாக கைகளை கழுவவில்லை என்றால், “கையுறைகளை அணிவதில் அர்த்தமில்லை” என்று அவர் கூறுகிறார்.


தற்போது இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோ சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது மற்றும் 67,000 தடவைகளுக்கு மேல் பகிரப்பட்டுள்ளது.


நாவல் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக இந்தியா உட்பட பெரும்பான்மையான நாடுகள் முழுமையான பூட்டுதலை விதித்துள்ளன. COVID-19 க்கு எதிராக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள் குறித்து சுகாதார அதிகாரிகளும் அமைப்புகளும் மக்களை மீண்டும் மீண்டும் உணர்த்துகின்றன, இந்நிலையில் தற்போது மோலி லிக்ஸி வெளியிட்டுள்ள வீடியோ கொரோனா குறித்த புரிதலை மக்களுக்கு எளிதில் விளக்குகிறது.