வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாம்புகள் என்றால் அச்சப்படாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். பாம்பை கண்டாலே அங்கிருந்து பலர் ஓடிவிடுவது உண்டு. நீங்களும் அப்படிப்பட்டாராக இருந்தால், இந்த வீடியோவை பார்ப்பதை தவிர்க்கவும். பாம்பு பற்றிய ஒரு வித்தியாசமான வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.


மிகப்பெரிய மலைப்பாம்பு ஒன்று படிக்கட்டுகளின் கைப்பிடியில் ஊர்ந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை இந்திய வன சேவை (IFS) அதிகாரி சுசாந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையவாசிகளை ஆச்சரியத்திலும் வியப்பிலும் ஆழ்த்தியுள்ளது. 


மேலும் படிக்க | சிங்கிளாய் சிக்கிய சிங்கம், பந்தாடி பலியாக்கிய எருமை கூட்டம்: பதபதைக்கும் வைரல் விடியோ 


“மேலே செல்ல, எப்போதும் எல்லோருக்கும் படிக்கெட்டுகள் தேவைப்படுவதில்லை” என சுசாந்தா நந்தா இந்த வீடியோவில் தலைப்பில் எழுதியுள்ளார். 


மலைப்பாம்பு படிக்கட்டுகளை கடக்கும் வினோத வீடியோவை இங்கே காணலாம்: 



இந்த வீடியோ நெட்டிசன்களிடமிருந்து உடனடியாக பலவித ரியாக்‌ஷன்களை பெற்று வருகிறது. இது பகிரப்பட்ட சில மணிநேரங்களில் சுமார் 10K வியூஸ்கள்ளையும் நூற்றுக்கணக்கான லைக்குகளையும் ரீட்வீட்களையும் பெற்றது. 


இணையவாசிகள் இதற்கு பலவித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். ஒரு பயனர், "பாம்புகளால் எங்கு வேண்டுமானாலும் எளிதாக ஏற முடியும். கொடுத்து வைத்த ஜீவன்கள்” என ஒரு பயனர் கமெண்ட் செய்துள்ளார்.


மற்றொரு பயனர், “படிக்கெட்டுகளில் நாம் இறங்கி வரும்போது, ஒரு பாம்பு இப்படி ஏறிக்கொண்டிருந்தால் எப்படி இருக்கும் என நினைத்துப்பாருங்கள்” என ஒருவர் வேடிக்கையாக கேள்வி கேட்டுள்ளார்.


ஒரு பயனர் இந்த வீடியோவை எடுத்த நபரை வியந்து பாராட்டியுள்ளார். "வீடியோவை படம்பிடித்த நபரின் தைரியத்தை என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. பாராட்டுக்கள்" என்று அவர் கூறியுள்ளார். மற்றொருவர் இந்த பாம்புக்கு ‘ நிஞ்சா பாம்பு’ என பெயரிட்டுள்ளார். 


மேலும் படிக்க | போதையில் கோழி செய்யும் செயலை பாருங்க..செம காமெடி வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ