ஒக்லஹோமா: தாய்மை என்பது தனது குழந்தைகளின் நலனை மட்டும் வேண்டுவதல்ல என்பதை நிரூபித்திருக்கிறார் அமெரிக்க அன்னை ஒருவர். ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய பிறகு அந்நாட்டை சேர்ந்த பெண்களின் பாதுகாப்பு பற்றி உலகமே கவலைப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுபோன்ற சூழ்நிலையில் 16 முதல் 18 வயது வரை உள்ள 10 இளம் பெண்களை காப்பாற்றியிருக்கிறார் இந்த 60 வயது அமெரிக்கப் பெண்மணி. ஆப்கன் பெண்கள் ரோபாட்டிக்ஸ் குழுவின் 10 உறுப்பினர்களை மீட்ட இந்த அமெரிக்க பெண்ணை தற்போது உலகமே சூப்பர் ஹீரோவாக பார்க்கிறது.


தலிபான்கள் நாட்டின் ஆட்சியை பிடிப்பதற்கு முன்பு ஆப்கானிஸ்தானில் இருந்து ஒரு பிரபலமான பெண் ரோபோடிக்ஸ் குழுவைச் சேர்ந்த 10 பேரை மீட்டார் இந்த பெண். அவர்களை காபூலில் இருந்து பாதுகாப்பான இடத்திற்கு மாற்றினார் 60 வயது அல்லிசன் ரெனோ (Allyson Reneau). 11 குழந்தைகளின் தாயான இவருக்கு 9 பெண் குழந்தைகள் உள்ளனர். 


Also Read | இளஞ்சிவப்பு டால்பினின் அற்புதமான தோற்றம்! இணையத்தில் வைரல்


ஹார்வர்ட் பட்டதாரியான ரெனோ, ஆப்கானிஸ்தானில் பதற்றம் அதிகரித்தபோது, அங்குள்ள பெண்களின் நல்வாழ்வு குறித்து கவலைப்பட்டார்.  சில ஆண்டுகளுக்கு முன்னதாக, 2019 ஹியூமன் டு மார்ஸ் மாநாட்டில் ரோபாட்டிக்ஸ் குழுவினரை சந்தித்த ரெனோ, தொடர்ந்து அவர்களுடன் தொடர்பில் இருந்தார்.


கத்தாரில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணிபுரியும் தனது தோழியின் உதவியுடன் 10 சிறுமிகளையும் குழந்தைகளை வெளியேற்றுவதற்கு தேவையான ஆவணப் பணிகளை செய்துக் கொடுத்தார். பிறகு கத்தார் அரசு ஒரு விமானத்தை அனுப்பி சிறுமிகளை வெளியே அனுப்பியது. ஆப்கானிஸ்தானில் தற்போது நிலவும் பதற்றமான சூழ்நிலை குறித்த செய்திகளுக்கு மத்தியில் இந்த செய்தி ஒரு ஆறுதல் தரும் செய்தியாக நம்பிக்கைக் கீற்றை ஏற்படுத்துகிறது.


இறுதியாக, 10 பெண்கள் காபூல் விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கா செல்லும் விமானத்தில் ஏறி வெற்றிகரமாக நாட்டை விட்டு வெளியேறினார்கள். இப்போது நாட்டில் ஒரு பாதுகாப்பான இடத்தில் இருக்கும் அந்தச் சிறுமிகள் அங்கிருந்து தங்கள் கல்வியைத் தொடரவுள்ளனர்.




 
ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் தாலிபன்களின் கிளர்ச்சி நடவடிக்கைகளில் அவர்களின் முன்னேற்றமும், அந்நாட்டு ராணுவத்தின் பின்னடவையும் பார்த்த ரெனோ, சிறுமிகள் ஆபத்தில் உள்ளனர் என்று புரிந்துக் கொண்டார். எப்படியாவது  அவர்களை வெளியேற்ற வேண்டும் என்பதற்காக கத்தாரில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணிபுரியும் தனது தோழியை தொடர்புகொண்டு தேவையான ஆவணங்களைத் தயாரிக்கத் தொடங்கினார். ரெனோவின் தோழியின் உதவியுடன் அனைத்து ஆவணங்களையும் தயார் செய்து, ஆப்கன் பெண்களை பத்திரமாக காபூலில் இருந்து வெளியேற்றும் செயல்முறையைத் தொடங்கினார். 


"அவர்கள் அனைவரின் பாஸ்போர்ட்டுகளையும் வாங்கிக் கொண்டு, நள்ளிரவில் தூதரகத்திற்குச் சென்று, இரவு முழுவதும் வேலை செய்து, பெண்களை நாட்டை விட்டு அழைத்துச் செல்வதற்கான ஆவணங்கள் மற்றும் முன்னேற்பாடுகளை எனது தோழி தயாரித்தாள்” என்று ரெனோ கூறினார்.



இந்த செய்தியை பகிரும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட ரெனோ, ஆனால் இரண்டாவது குழு பெண்கள் இன்னும் மீட்கப்படவில்லை என்றும் வருத்தம் தெரிவித்தார். தற்போது, அனைவரின் உதவியுடன் ரோபோடிக்ஸ் அணியில்  உள்ள 25 சிறுமிகளையும் அவர்களின் வழிகாட்டிகளையும் வெளியேற்றும் நடைமுறையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.


"ஆப்கானிஸ்தானின் காபூலில் இருந்து பெண்கள் ஆப்கானிஸ்தான் ரோபாட்டிக்ஸ் குழுவின் பல உறுப்பினர்கள் பாதுகாப்பாக வந்துள்ளனர்" என்று டிஜிட்டல் சிட்டிசன் ஃபண்ட் மற்றும் கத்தார் வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கை ஆப்கானிஸ்தான் பெண்கள் ரோபோடிக் குழு பற்றி கூறியது.


மீட்புக்கு முன்பு ரெனோ இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார், அவர்களுக்காக பிரார்த்தனை செய்யும்படி அனைவரையும் கேட்டுக் கொண்டார் ரெனோ. "நான் பொதுவாக உதவி கேட்க விரும்புவதில்லை, ஆனால் தயவுசெய்து இந்த ஆப்கான் பெண்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள். நான் அதிகம் சொல்ல முடியாது, ஆனால் அவர்களுக்கு இப்போது ஏதாவது ஒரு அதிசயம் நடக்கவேண்டும்" என்று அந்தப் பதிவில் கேட்டுக் கொண்டார் ரெனோ.


Also Read | ஆமைகளுக்கு ஆபத்தான டிரைவராக மாறிய ஹிப்போபொட்டாமஸ் சவாரி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR