முகநூலில் ஒவ்வொரு லைகுக்கும் ஒவ்வொரு குத்து வாங்கிய மனைவி
முகநூலில் புகைப்படம் போட்ட பெண்ணின் கணவன் ஒவ்வொரு லைகுக்கும் ஒவ்வொரு குத்துவிட்டு சித்ரவதை செய்த கொடூர கணவர்.
உருகுவே நாட்டின் சன்சின் மாகாணம், நெம்பி பகுதியைச் சேர்ந்தவர் அடோல்பினோ. இவரது கணவர் கேலியானோ. தனது மனைவி அடோல்பினோ மீது சந்தேகம் கொண்டு, அவரைத் தாக்குவதும், வீட்டில் அடைத்து வைத்து சித்தரவரை செய்வதையே வேலையாக வைத்துள்ளார்.
மனைவியின் முகநூல் பக்கத்தினை முழுவதுமாக கேலியானோ பொறுப்பில் எடுத்துக் கொண்டார். பின்னர், மனைவியின் புகைப்படத்தை பதிவிட்டு, அதற்கு வரும் லைக், கமெண்ட், ரியாக்ஷன் என அனைத்துக்கும் ஒவ்வொரு குத்துவிட்டு சித்தரவதை செய்து வந்துள்ளார்.
சித்தரவதைக்கு ஆளான அடோல்பினோவின் நிலையைப் பார்த்த, கேலியானோவின் தந்தை போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, போலீசார் கேலியானோவை கைது செய்தனர். அவருக்கு 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கேலியானோவின் தாக்குதலுக்கு ஆளான அடோல்பினோவின் வாய் உடைந்து விட்டதாகவும், அடையாளம் தெரியாதபடி முகம் வீங்கி உள்ளது. பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அவருக்கு முக ஒழுங்கமைப்பு சிகிச்சை செய்து கொள்ள உள்ளதாகவும் தெரிகிறது.