கேரளா மக்களுக்காக நான் இறைவனிடம் பிரார்த்திகிறேன் தென்னாப்பிரிக்க முன்னாள் கிரிக்கெட் வீரர் ஏபி டி வில்லியர்ஸ்!
 
கேரளாவில் 3 வாரங்களுக்கு மேலாக பெய்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளது. வெள்ளத்தால் இதுவரை 368 பேர் மழைக்கு பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். முப்படைகளும் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் இணைந்து சுமார் 1300 வீரர்கள் வரை மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வெள்ளத்தால் பாதிப்படைந்த கேரளா மக்களுக்கு பலரும் நிவாரண நிதியை வழங்கி வருகின்றனர். நாடு ழுமுவதிலும் இருந்து பல கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் கேரளாவுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரள பெருவெள்ளம் குறித்து தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 


அதில், "கேரளாவில் பெருவெள்ளத்தால் பாதிக்கப்படுள்ள மக்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன். 100-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 2 லட்சம் பேர் வீடுகளை இழந்துள்ளனர். பயங்கரம்!" என்று பதிவிட்டுள்ளார்...!