இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா தன்னுடைய முழு ஆதரவும் பாஜகவிற்கு என அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ரவீந்திர ஜடேஜாவின் மனைவி, பாஜகவில் இணைந்ததை தொடர்ந்து, அவரது தந்தையும், சகோதரியும் தற்போது காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர்.


இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவீந்திர ஜடேஜா, குஜராத் மாநிலம், ஜாம்நகரைச் சேர்ந்தவராவார். இவரது மனைவி ரிவாபா, கடந்த மாதம் 3  ஆம் தேதி பாஜகவில் இணைந்தார்.


இதை தொடர்ந்து, ஜடேஜாவின் தந்தை அனிருத் சிங் மற்றும் அவரது சகோதரி நைனபா கடந்த வாரம் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். ஜாம்நகர் காங்கிரஸ் வேட்பாளர் முலு கண்டோரியா முன்னிலையில் அவர்கள் இருவரும் காங்கிரசில் தங்களை இணைத்து கொண்டனர்.


இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரரான ரவீந்திர ஜடேஜா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் என்னுடைய முழு ஆதரவையும் BJP-க்கு தருவதாக அவர் தெரிவித்துள்ளார். 



பாஜகவில் மனைவி, காங்கிரசில்  சகோதரி என ரவீந்திர ஜடேஜா வீட்டு அரசியல் சபாஷ் சரியான போட்டியாக உள்ளதாக அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி பொங்க தெரிவிக்கின்றனர். குஜராத்  மாநிலத்தில் மொத்தமுள்ள 26 மக்களவைத் தொகுதிகளுக்கும் வரும் 23 ஆம் தேதி, ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.