பண்டைய காலத்தில் காதலுக்கு தூது போனது புறா என்றால், தற்போதைய காலக்கத்தில் இருக்கும் நவீன புறாக்களுக்கு பெயர் WhatsApp, Facebook  என கூறலாம்...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இளைஞர்களில் காதலை வளர்ப்பதில் இந்த நவீன செயலிகளுக்கு பெரும் பங்கு உண்டு. எனினும் காதலர்கள் இருவரும் ஒருமனதாக பங்கேற்றால் தானே இந்த செயலிகளுக்கு வேலை. ஒருவேலை இருவரில் ஒருவர் கோபித்துக்கொண்டு அமைதி காத்தால் என்னவாகும்...


அப்படி தான் நிகழ்ந்துள்ளது Paulina Ramizzle-வுக்கு. 21-வயதாகும் இந்த இளம்பெண் கலிபோர்னியா பல்கலைகழகத்தில் பட்டைய படிப்பு பயின்று வருகின்றார். இவரது காதலன் George Giron கடந்த சில நாட்களாக Paulina Ramizzle உடன் பேசுவதை நிறுத்தியுள்ளார். Paulina தொடர்ந்து George-க்கு குறுஞ்செய்திகள் அனுப்பியும் அவர் பதில் அனுப்ப மறுத்துள்ளார்.



இதன் காரணமாக ஆத்திரம் அடைந்த Paulina தனது காதலன் எங்கே சென்றான் என ஒரு குறும்படம் எடுத்து, அதற்கான ட்ரைலரினை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு 'Where the f**k is George?' என பெயரிட்டுள்ளார்.


இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகின்றது.