அரசின் உத்தரவை ஏற்று மக்கள் அனைவரும் வீட்டிற்குள் இருக்க வேண்டும் என பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கோரிக்கை விடுத்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா வைரஸ் விழிப்புணர்வு தொடர்பாக வீடியோ வெளியிட்டு மக்களிடம் பேசி வந்த சச்சின் டெண்டுல்கர், கொரோனாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் பல்வேறு நாடுகளும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இது வரை உலக அளவில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர், 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இந்தியாவிலும், ஊடுருவிய கரோனா வைரஸுக்கு இதுவரை 18 பேர் பலியாகியுள்ளனர். 750-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கையில் முக்கியமாக சமூக விலக்கைக் கடைப்பிடிக்க 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியது. 


ஊரடங்கு உத்தரவு தொடர்பாக பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பின், நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர், தனது ட்விட்டர் பக்கத்தில் கரோனா விழிப்புணர்வு தொடர்பாக வீடியோ வெளியிட்டு வருகிறார். அதில், “மக்களிடம் இருகரம் கூப்பிக் கேட்கிறேன், தயவுசெய்து வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம்” எனக் கேட்டுக்கொண்டார்.



இது குறித்து தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்.... ஒரு சமூகமாக, நம்மில் நேர்மறையாக சோதிக்கப்பட்டவர்கள், எங்கள் பாசத்தைப் பெறுவது, அவர்கள் வெட்கப்படக்கூடாது என்பதே நமது பொறுப்பு. # சமூக விரோதத்தை வைத்திருங்கள், ஆனால் அவர்களை சமூகத்திலிருந்து விலக்கி வைக்க வேண்டாம். #கொரோனா வைரஸுக்கு எதிரான இந்த போரை நாம் வெல்ல முடியும், ஒருவருக்கொருவர் ஒத்துழைக்கவும்" என அவர் குறிப்பிட்டுள்ளார். 


இந்நிலையில், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் சச்சின் டெண்டுல்கர் ரூ.50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். விளையாட்டு வீரர்களில் சச்சின் டெண்டுல்கர் அளித்த நன்கொடை தான் இதுவரை அதிகமானதாகும். இர்பான் பதான், யூசுப் பதான் சகோதரர்கள் போலீஸார், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோருக்கு 4 ஆயிரம் முகக் கவசங்களை வழங்கியுள்ளனர். தோனி மூலம் புனேவில் உள்ள தனியார் தொண்டு நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் வழங்கப்பட்டுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.