IPL 2020, RCB vs DC: பெங்களூரு பேட்ஸ்மேன் ஆரோன் ஃபின்சை எச்சரித்த அஸ்வின்..!
மன்கட் முறையில் அவுட் செய்யாமல் பெங்களூரு பேட்ஸ்மேன் ஆரோன் ஃபின்சை எச்சரித்தார் டெல்லியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின்..!
மன்கட் முறையில் அவுட் செய்யாமல் பெங்களூரு பேட்ஸ்மேன் ஆரோன் ஃபின்சை எச்சரித்தார் டெல்லியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின்..!
துபாயில் நடைபெற்று வரும் 2020 ஐபிஎல் (IPL 2020) தொடரின் 19-வது லீக் சுற்றுப் போட்டியில், டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் மோதினார். இந்நிலையில், டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 196 ரன்கள் குவித்து பெங்களூர் அணிக்கு சவால் விட்டது. பெங்களூர் அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
பெங்களூர் அணி பேட்டிங் செய்த போது, மூன்றாவது ஓவரை டெல்லி அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் வீசினார். இந்த ஓவரின் மூன்றாவது பந்தை அஸ்வின் வீச வந்த போது, பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் ஃபிஞ்ச், அஸ்வின் பந்து வீசி முடிப்பதற்கு முன்னரே கிரீஸை விட்டு வெளியே சென்றார்.
அவரை மான்கட் அவுட் செய்வது போல, அஸ்வின் ஃபிஞ்சுக்கு வார்னிங் கொடுத்தார். இதனைக் கண்ட டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் புன்னகை செய்தார். முன்னதாக நடைபெற்ற IPL சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஜோஸ் பட்லரை மான்கட் முறையில் அஸ்வின் அவுட் செய்தது மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
ALSO READ | பந்தில் எச்சிலை தடவிய விராட் கோலி; சச்சின் டெண்டுல்கரின் ரியாக்ஷன் - Watch
இந்நிலையில், அஸ்வின் மீண்டும் மான்கட் முறையில் அவுட் செய்ய முயன்ற வீடியோ அதிகம் வைரலாகி வருகிறது. இதனையடுத்து, இது தொடர்பாக அஸ்வின் போட்டிக்கு பின்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். '2020 ஆம் ஆண்டுக்காக இது எனது முதல் மற்றும் இறுதி வார்னிங் ஆகும். அதனால் இனிமேல் நான் ஏதேனும் செய்தால் என்னை குறை கூற கூடாது. அது மட்டுமில்லாமல் நானும், ஃபிஞ்சும் சிறந்த நண்பர்கள்' என தெரிவித்துள்ளார். அஸ்வினின் இந்த பதிவு, ஐபிஎல் ரசிகர்களிடையே தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.