ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 11) கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2021-ன் தங்களது தொடக்க ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி தோற்றிருகலாம். ஆனால், சென்னை எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டியில் SRH அணியின் மிகப்பெரிய ரசிகை பலரது கவனத்தைக் கவர்ந்தார். KKR ஆல் ரவுண்டர் ஆண்ட்ரே ரசலின் விக்கெட் வீழ்ந்ததைக் கொண்டாடியபோது மட்டுமல்லாமல் பலமுறை கேமரா அவரை ஃபோகஸ் செய்ததைக் காண முடிந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

SRH-ன் ஆரஞ்சு ஜெர்சி அணிந்த அவரும் அவரது நண்பர்களும், டேவிட் வார்னர் தலைமையிலான SRH அணியை உற்சாகப்படுத்தி போட்டியைக் கண்டு களித்தனர். பலரை திரும்பிப் பார்க்க வைத்த அந்த ‘மர்ம பெண்’ வேறு யாருமல்ல, கலாநிதி மாரன் குடும்பத்தைச் சேர்ந்த காவியா மாரன்!! காவியா மாரன் SRH ஃப்ரான்சைசின் தலைமை நிர்வாக அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. தொற்றுநோய் அதிகரித்து வரும் இந்த சமயத்தில் அவர் முகக்கவசம் அணியாமல் இருந்ததும் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. 


வைரலாகி வரும் காவியா மாரனின் வீடியோ உங்கள் பார்வைக்கு: 



ALSO READ: IPL 2021 SRH vs KKR: கொல்கத்தா 10 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத்தை வீழ்த்தியது!


பி.சி.சி.ஐ.யின் (BCCI) புதிய விதிப்படி, IPL போட்டியைப் பார்க்க விரும்பும் நபர் தனக்கு கோவிட் தொற்றுநோய் இல்லை என்பதற்கான அறிக்கையை கொண்டு செல்ல வேண்டும். 


காவியா மாரன் கலாநிதி மாரனின் மகள். அவர் சன் டிவி-யின் சன் மியூசிக் மற்றும் எஃப்.எம் சேனல்களில் முக்கிய பொறுப்புகளை வகிக்கிறார். 2018 ஆம் ஆண்டு IPL சீசனில் மக்கள் அவரை முதன் முதலில் தொலைக்காட்சியில் கண்டனர். அப்போதும் அவர் KKR அணிக்கு எதிரான போட்டியில் SRH அணியை உற்சாகப் படுத்த வந்திருந்தார். 


IPL 2021 ஏலத்தின்போது, ​​ஏலம் நடந்த விதத்திலும், ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள் விஷயத்திலும் தங்கள் அணி மகிழ்ச்சியாக உள்ளது என அவர் ட்விட்டர் மூலம் ரசிகர்களுக்கு தெரியப்படுத்தினார். 


நேற்றைய் ஆட்டத்தில், KKR துவக்க ஆட்டக்காரர் ஷுப்மன் கில் விக்கெட்டை SRH சுழற்பந்து வீச்சாளர் ராஷித் கான் வீழ்த்தியபோது, காவியா மகிழ்ச்சியில் துள்ளி குதித்து அதைக் கொண்டாடியதைக் காண முடிந்தது.


ALSO READ: IPL 2021: ஸ்டார் கிரிக்கெட் வீரர்களின் முதல் IPL சம்பளம் என்ன தெரியுமா?


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR