மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் அவர்கள் நேற்றை கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் மோடி அவர்களை சந்தித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இச்சந்திப்பிற்கு பின்னால் அரசியல் நோக்கம் இருக்கலாம் என தகவல்கள் கசிந்து வருகின்றது. தென்னிந்தியாவில் தாமைரையினை மலர வைக்க வேண்டுமென பல முயற்சிகளை மேற்கொண்டு வரும் பாஜக-வினர் தென்னிந்திய திரைப் பிரபலங்களை தங்கள் பக்கம் ஈர்த்து வருவதாக விமர்சனங்கள் வைக்கப்பட்டு வரும் இந்நிலையில் இச்சந்திப்பு அனைவரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது.


வரும் 2019-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், திருவனந்தபுரம் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூருக்கு எதிராக பாஜக சார்பில் நடிகர் மோகன் லால்-னை களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளது என்னும் தகவல்களும் பரவி வருகின்றது. இதற்கிடையில் இன்று காலை பிரதமர் மோடி அவர்கள் தனது ட்விட்டர் பக்கதில் நடிகர் மோகன் லாலினை பாராட்டி பதிவிட்டுள்ளதாவது...



"நேற்றைய தினம் திரு. மேகன்லால் அவர்களை சந்தித்தேன். அவரது பரந்த சமூக சேவை முயற்சிகள் பாராட்டுதலுக்கு உரியை. இந்த சேவை உணர்வு மற்றவருக்கு ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.


இதற்கு முன்னதாக நேற்றைய தினம் லால் அவர்கள் தனது முகப்புத்தகத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளதாவது....



"மரியாதைக்குறிய பிரதமர் மோடி அவர்களை கிருஷ்ண ஜெயந்தி நாளில் சந்தித்ததில் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன். விஷ்வசாந்தி அறக்கட்டளை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு சமூக சேவை முயற்சிகள் குறித்து இச்சந்திப்பில் பேசப்பட்டது. பிரதமர் மோடி அவர்களும் தனது ஆதரவினை விஷ்வசாந்தி அறக்கட்டளை மூலம் செய்யடும் சேவைகளுக்கு அளிக்க தயாரா உள்ளார்" என குறிப்பிட்டுள்ளார்.


விஷ்வசாந்தி அறக்கட்டளையானது நளிவுற்ற மாணவர்களுக்கு உதவும் நோக்கத்தோடு நடிகர் மோகன்லால்-ஆல் துவங்கப்பட்ட அறக்கட்டளை என்பது குறிப்பிடத்தக்கது!