ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் சமூக வலைதளங்களில் வீர தமிழச்சி என்று பெயர் பெற்ற ஜூலி, பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பிரபலமானார். தற்போது இவர் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராகவும் மற்றும் விளம்பரங்கள் போன்றவற்றிலும் நடித்துவருகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் இவர், தற்போது 'கே7 புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார். இந்தப் படத்திற்கு ‘உத்தமி’ என்று பெயர் வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 


மேலும் இந்த படத்தில் ஜூலியும் 4 பேரும், தப்பாட்டம் போன்ற படங்களில் நடித்த பப்ளிக் ஸ்டார் துரை சுதாகருடன் நடிக்க உள்ளார்.