இணையத்தில் வைரலாகும் கனடாவின் பிரபல பாப் இசைப் பாடகர் ஜஸ்டின் பீபருக்கும், அமெரிக்க மாடல் ஹெய்லி பால்ட்வின்னு உல்லாசமாக இருக்கும் புகைப்படம்! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் அவரது காதலியான அமெரிக்க மாடல் அழகி ஹெய்லி பால்ட்வின்னுக்கும் இடையே நிச்சயதார்த்தம் முடிந்த செய்தியே பலராலும் தாங்க முடியாத நிலையில், அவர் வெளியிட்டுள்ள மிக அந்தரங்கமான படம் இன்ஸ்டாகிராமையே ஆட்டிப்படைத்து வருகிறது. 


கனடாவை சேர்ந்த பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர், தனது இளம் வயதிலேயே இசைத்துறையில் புகழின் உச்சியை அடைந்தவர். இவரும் அமெரிக்காவை சேர்ந்த மாடல் அழகி ஹெய்லியும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இருவருக்கும் இடையே தற்போது நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகவும், விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் கடந்த வாரம் தகவல் வெளியானது. 


இந்நிலையில், ரசிகைகள் பட்டாளாம் நிறைந்த ஜஸ்டின் பீபருக்கு காதலியாக போட்டப் போட்டி எனப் பல கிசுகிசுக்கள் கசிவது வழக்கம். அவ்வளவு தீவிர ரசிகைகளைக் கொண்ட பீபர், அவர்களை மேலும் விரக்தியடைய செய்துவிட்டதாக இன்ஸ்டாகிராமில் பதிவுகள் அதிகம் உள்ளன. என்னவென்று பார்த்தால், அவர் தனது காதலி ஹெய்லியுடன் ஜஸ்டின் பீபருடன் பாத் டப்பில் இருக்கும்படி மிக நெருக்கமான முத்தக் காட்சிப் படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்தப் படம் தான் பல ரசிகைகளின் எரிச்சலுக்கு காரணமாக உள்ளது.