விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இந்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சமந்தா, நயன்தாரா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காத்துவாக்குல ரெண்டு காதல் (Kaathu Vaakula Rendu Kaadhal) படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனமும், விக்னேஷ் சிவன் (Vignesh Shivan) - நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. முன்னதாக இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் ஏற்கனவே இசையமைப்பாளர் அனிருத் இசையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.


ALSO READ | விரைவில் முக்கிய அறிவிப்பு, நயன்தாரா - விக்னேஷ் சிவன் அதிரடி முடிவு


தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு கோயமுத்தூரில் கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கி ஐத்ராபாத், சென்னையில் நடந்தது. பின்னர் கொரோணா காரணமாக படப்பிடிப்பு தாமதமானது. இந்நிலையில் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது பாண்டிச்சேரியில் தொடங்கியுள்ளது. 


இதற்கிடையில் The Family Man- 2 என்ற வெப் தொடரில் நடித்ததற்காக நடிகை சமந்தாவுக்கு சிறந்த நடிகைக்கான விருதை மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் (Indian Film Festival Of Melbourne) வழங்கப்பட்டது. அதை கொண்டாடும் விதமாக காத்துவாக்குல ரெண்டு காதல் படப்பிடிப்பில் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். அதில் சமந்தாவுடன் (Samantha), நயன்தாரா (Nayanthara), விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி உள்ளனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


 



ALSO READ | மனைவியாகும் நயன்தாரா.. ஆனால் கணவர் விக்னேஷ் சிவன் இல்லை..


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR