கொடி, கட்சி, மக்கள் என கமலின் அரசியல் பிரகடனம் -முழு விவரம்
மதுரையில் நடைபெறும் பொதுகூட்டத்தில் கமல்ஹாசன் பங்கேற்றார்.
மதுரையில் நடைபெற்ற பொதுகூட்டத்தில் கமல்ஹாசன் பேசியதாவது:-
ஓட்டுக்கு பணம் வாங்கவேண்டாம். பணம் வாங்காமல் நல்ல கட்சிக்கு வாக்களித்தீர்கள் என்றால் ரூ.6000 இல்லை ரூ.6 லட்சம் கூட வருமானம் ஈட்டலாம்.
எல்லா தரப்பினருக்கும் தரமான கல்வி போய்ச் சேர வேண்டும்
சாதி, மதம் அறவே நீக்கப்பட வேண்டும்; ஊழலை ஒழிக்க வேண்டும்
லட்சம் தோழர்களின் ஒரு பகுதிதான் மதுரை கூட்டம்.
கடந்த காலங்களில் எங்கள் நற்பணி இயக்க பணிகளுக்கு தடை வந்தது; கடந்தவை கடந்தவையாக இருக்கட்டும், ஆனால் மறந்தவையாக இருக்காது.
அநீதிகளை கண்டு காத்திருக்க முடியாமல் களம் இறங்கியுள்ளோம்.
எங்கள் தண்டவாளமும், உங்கள் வண்டவாளமும் வெளியே வரும்.
இடது, வலது என்று யோசிக்காமல் மக்களின் நலனை கருத்தில் கொண்டு புறப்பட்டு வந்திருக்கிறோம்.
மதுரையில் நடைபெற்ற பொதுகூட்டத்தில் பங்கேற்ற டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:-
சிறந்த நடிகரான கமல் உண்மையான ஹீரோவாக மாறி உள்ளார். டெல்லி மக்களைப்போல தமிழக மக்களும் வரலாற்றை மாற்றி அமைப்பார்கள். அதிமுக, திமுக என்ற இரு கட்சிகளுமே ஊழல் கட்சி. இந்த இரண்டு கட்சிகளிடம் தமிழக மக்கள் சிக்கித் தவிக்கிறார்கள். திமுக, அதிமுக-வுக்கு மாற்றாக கமல்ஹாசன் வந்துள்ளார்.
சில வினாடிகளில் முகநூலில் ஐயாயிரமும், ட்விட்டர் பக்கத்தில் 7 ஆயிரம் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை.
முகநூலில் "மக்கள் நீதி மய்யம்" அதிகாரப்பூர்வ பக்கத்தை அறிவித்தார். அதேபோல ட்விட்டரிலும் அதிகாரப்பூர்வ பக்கத்தை அறிவித்தார். அதைக்குறித்து கமல்ஹாசன் தனது சமூக வலைதளத்தில் அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.
அதில் அவர் கூறியதாவது:- நாம் கனவு காண்கிறோம். ஒரு புதிய கட்சி, ஒரு புதிய பாதை, ஒரு புதிய கொள்கை. ‘மக்கள் நீதி மய்யம்’
தமிழகம் விழித்தெழட்டும். #மய்யம் #மக்கள்_நீதி_மய்யம் எனக் கூறியுள்ளார்.
மக்கள் தான் தலைவர்கள். நான் வெறும் கருவி மட்டுமே. அரசியலில் நாம் முன்னோடியாக இருக்க வேண்டும். நமக்கு கடமைகள் அதிகமாக இருக்கிறது.
கமலின் கட்சி கொடியில் சிகப்பு, கருப்பு மற்றும் வெள்ளை நிறங்கள் உள்ளது. இணைந்த கரங்களோடு நடுவில் நட்சத்திரம் உள்ளது.
மதுரை பொதுகூட்டம் நடைபெறும் மைதானத்திறல் தனது கட்சி கொடியை ஏற்றினார் கமல்ஹாசன். பின்னர் கட்சியின் பெயரையும் அறிவித்தார். கட்சியின் பெயர் "மக்கள் நீதி மய்யம்"
மதுரை பொதுகூட்டம் நடைபெறும் மைதானத்திறல் தனது கட்சி கொடியை ஏற்றினார் கமல்ஹாசன்.
சற்று நேரத்தில் கட்சி கொடியை ஏற்றி வைத்து கட்சி பெயரை அறிவிக்கிறார்.
மதுரை பொதுகூட்டத்தில் கவிஞர் சிநேகன் பேசி வருகிறார்.
மதுரை பொதுகூட்டம் நடைபெறும் மைதானத்திற்கு வந்தானர் கமல் மற்றும் அர்விந்த் கெஜ்ரிவால்
மதுரை பொதுகூட்டத்தில் கலந்துகொள்ள வந்த டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலை வரவேற்றார் கமல்ஹாசன்.
மதுரையில் கமல்ஹாசன் பொதுக்கூட்டத்தில் லட்சம் பேர் பங்கேற்பு
இன்னும் சற்று நேரத்தில் கட்சி பெயர், கொள்கைகளை அறிவிக்க உள்ளார்.
கமலை காண கடல் போல திரண்ட மக்கள் கூட்டம்
இன்னும் சற்று நேரத்தில் தனது அரசியல் பயணத்தை பற்றி அறிவிக்க உள்ளார் கமல்ஹாசன்
கமல்ஹாசனுக்கு வழிநெடுக ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இன்று காலை ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் வீட்டில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார் நடிகர் கமல்ஹாசன். கமலுக்கு நினைவு பரிசு தந்தார் கலாம் பேரன். கலாம் வீட்டில் காலை உணவு அருந்திய கமல், அங்கிருந்து கலாம் பயின்ற மண்டபம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு செல்ல இருந்தார், ஆனால் பள்ளிக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
இதனையடுத்து மீனவர்களை சந்தித்த கமல்ஹாசன், மீனவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டியது என் கடமை. கடல் மேலாண்மை, சர்வதேச சட்டங்களை மதிப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுப்போம். கேள்வி கேட்டால் பணிவுடன் பதில் சொல்ல வேண்டியது அரசின் கடமை என கமல் மீனவர்கள் மத்தியில் உரையாடினார்.
மாலை 6 மணிக்கு மதுரையில் நடைபெறும் பொதுகூட்டத்தில் பங்கேற்றார்.