கோவை ஈஷா மையத்தில் கங்கனா ரணாவத் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தாம் தூம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தலையை காண்பித்து விட்டு பாலிவுட்டில் பிஸியான நடிகை கங்கனா ரணாவத். இந்தியில் பல வெற்றிப் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி முத்திரையினை பதித்துள்ளார்.


தமிழில் ஒரு படத்தில் மட்டும் நடித்தாலும் தமிழகத்தில் ரசிகர்கள் பலரை கொண்டவர் கங்கனா. இவர் தற்போது ஆன்மிக பயணத்தில் இறங்கியுள்ளார். அந்த வகையில் இவர் கோவையில் இருக்கும் ஈஷா மையத்தின் ஆதிகேஷ் ஆஸ்ரமத்திற்கு சென்றுள்ளார். அங்கு தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


ஆதி யோகி சிலைக்கு முன்னர் அமர்ந்து தியானம் செய்யும் கங்கனாவின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.





கோவையில் ஈஷா யோகா மையம் சார்பில் 112 அடி ஆதியோகி சிலை நிறுவப்பட்டுள்ளது. ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு இங்கு தொடர்ந்து யோக பயிற்சி நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றார். இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க உலகம் முழுவதிலும் இருந்து பலரும் வந்து செல்வது வழக்கமாகி வருகின்றது.