`KARMA is a Boomerang` வைரலாகும் ஒட்டகத்தின் வீடியோ!
ஒட்டகத்தை தாக்க முயன்ற நபரை ஒட்டகம் தாக்கிய காட்சி சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
பொதுவாக மிருகங்களை நாம் துன்புறுத்தாதவரை அவை நமக்கு எவ்வித இடையூறையும் ஏற்படுத்தாது. மாறாக அதற்கு நாம் தீங்கு விளைவித்தால் அதனால் விளையும் விளைவே வேறு என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. 'கோவில்' படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு விலங்குகளை துன்புறுத்திவிட்டு அதன் வினைப்பயனால் படாதபாடுபடுவார், அதுபோல இங்கு ஒரு நபர் ஒட்டகத்தை தாக்க முயன்று அவர் ஒட்டகத்திடம் உதை வாங்கிய சம்பவம் இணையத்தில் வைரலாகி சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவை இந்திய வன சேவை (IFS) அதிகாரி சுசந்தா நந்தா என்பவர் அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவிற்கு “கர்மா” என்ற தலைப்பையும் வைத்துள்ளார், அந்த தலைப்பு அந்த சின்ன வீடியோவிற்கு பொருத்தமாக உள்ளது. அந்த வீடியோவில், அலங்கரிக்கப்பட்ட ஒட்டகம் ஒன்று ஒரு பாதையில் நடந்து செல்கிறது. அந்த ஒட்டகம் நடந்து செல்லும் பகுதியில் ஒரு சில ஆண்களும் நடந்து சென்று கொண்டிருக்கின்றனர். அந்த சமயத்தில் ஒட்டகத்திற்கு நேரெதிரே ஒரு நபர் நடந்து வருகிறார்.
சாதாரணமாக நடந்து வந்த அந்த நபர் திடீரென்று நடந்து செல்லும் ஒட்டகத்தின் காலில் அடிக்க முற்பட்டு தனது கையை உயர்த்துகிறார். அவரின் எண்ணத்தை உணர்ந்தாற்போல் அந்த ஒட்டகம் திடீரென்று தாக்க முயன்ற அந்த நபரை ஓங்கி ஒரு உதை விடுகிறது. உடனே அந்த நபர் ஒட்டகத்தின் உதவியால் கீழே விழுந்து விட அருகில் இருந்த மற்ற நபர்கள் பயந்து ஓடுகின்றனர். இந்த வீடியோ 70,500க்கும் மேற்பட்ட பார்வைகளையும், 4,900 லைக்குகளையும், 600 ரீட்வீட்களையும் பெற்று இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
ALSO READ | கடும்பனியிலும் பணியாற்றும் ராணுவ வீரர்கள்! வைரலாகும் வீடியோ!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR