வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, கர்நாடக முதல்வர் HD குமாரசாமி அவர்களின் சகோதரர் ரேவன்னா பிஸ்கெட் பாக்கெட்டுகளை தூக்கி எறியும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கார்நாடக மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மாநிலத்தின் மங்களூரு, குடகு, மைசூரு, உத்தர் கன்னடா ஆகிய மாவட்ங்களில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றனர்.


ராணுவ வீரர்களின் உதவியுடன் மீட்பு பணி தீவிரமாக நடைப்பெற்று வருகிறது, எனினும் குறைந்த வெளிச்சம் காரணமாகவும், வானிலை மேகமூட்டம் காரணமாகவும் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. 



கர்நாடக மாநிலம் குடகில் மட்டும் இதுவரை 10 பேர் மழைக்கு பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா 6 லட்சமும், மழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டத்திற்கு ரூ.200 கோடி நிவராண நிதியாகவும் முதல்வர் அறிவித்துள்ளார். 948 மீட்பு படை வீரர்களின் உதவியோடு இதுவரை 1250 பேர் மீட்கப்பட்டு 30-க்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்நிலையில் கர்நாடக மாநிலம் குடகில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொருட்களை வழங்குவதற்காக முதல்வர் HD குமாரசாமி அவர்களின் சகோதரர் ரேவன்னா அவர்கள் சென்றிருந்தார். அப்போது அவர் மக்களுக்கு வழங்கிய உணவு பொருட்களை தூக்கி எறிந்துள்ளார். இச்சம்பவத்தினை அங்கிருந்து பொதுமக்கள் படம் பிடித்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது!