கர்நாடகாவில் உள்ள தும்கூர் நகரில் பயன்படுத்தப்படும் பேருந்து ஒன்றில் ஒரு இருக்கைக்காக இரண்டு பெண்கள் முடியை பிடித்து இழுத்து சண்டை போட்ட வீடியோ இணையத்தில் நெட்டிசன்களிடையே சுழன்றடித்து கொண்டிருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரு சீட்டுக்கு இவ்வளவு பிரச்சனை..


கர்நாடக மாநிலம், தும்கூர் நகரில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வரும் பேருந்து, KSRTC. இதில் சில நாட்களுக்கு முன்பு பயணித்த இரண்டு பெண்கள் ஒரு இருக்கைக்காக சண்டை போடும் வீடியோ சமீபத்தில் இணையத்தில் வைரலானது. முடியை பிடித்து சண்டை போட்டது மட்டுமல்லாமல், இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி அடித்துக்கொண்டனர். 


வைரல் வீடியோ:


கர்நாடக பேருந்தில் நடந்த இந்த விஷயத்தை சம்பவம் நடைப்பெற்ற போது அருகில் இருந்த சக பயணி ஒருவர் படம் பிடித்துள்ளார். 



இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதை தொடர்ந்து, தற்போது வரை 1,148 லைக்ஸ்களை பெற்றுள்ளது. இதை மொத்தம் 178 பேர் ரீட்வீட் செய்துள்ளனர். இந்த வீடியோவை சுமார் ஒரு லட்சத்து 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். 


நெட்டிசன்களின் ரியாக்‌ஷன்:


இரண்டு பெண்கள் முடியை பிடித்து சண்டை போட்டுக்கொள்ளும் இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் விதவிதமான ரியாக்‌ஷன்களை கொடுத்துள்ளனர். ஒரு சிலர், இதை WWE விளையாட்டுடன் ஒப்பிட்டு மீம்ஸ் வீடியோவாக  மாற்றி வருகின்றனர். ஒரு சிலர், இது மிகவும் கொடுமையான விஷயம் என கமெண்டுகளில் கூறி வருகின்றனர். ஒரு சிலர், “வீடியோ எடுப்பதை விட்டுவிட்டு இருவருக்கும் இடையே நடக்கும் சண்டையை விலக்கி விடலாமே..” என்று கூறிவருகின்றனர். 


மேலும் படிக்க | இது மெகா கூட்டணி.. பாம்பை பதம் பார்த்த தவளை, பூனை: வீடியோ வைரல்


பொது மக்களுக்கு பாதுகாப்பு இல்லையா..?


இந்த சம்பவம் பொதுப் போக்குவரத்து போன்ற பகிரப்பட்ட இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அமைதியான சகவாழ்வு தொடர்பான பிரச்சினைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது என சிலர் தெரிவித்து வருகின்றனர். 


பஸ்ஸில் இரண்டு பெண்கள் அடித்துக்கொண்ட இந்த சம்பவம் பொது இடங்களில் அதிகரித்து வரும் வன்முறை சம்பவங்கள் பற்றிய விவாதங்களை தூண்டியுள்ளது. பல பயனர்கள் மோதல்களுக்கு வன்முறையற்ற தீர்மானங்களை ஊக்குவிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வருகின்றனர். மேலும், பொது இடங்களில் ஒருவரையொருவர் ஒழுங்கையும் மரியாதையையும் பராமரிக்க வேண்டும் என்றும் நெட்டிசன்களில் சிலர் தெரிவித்துள்ளனர். குறிப்பாக பொது போக்குவரத்தில் பயணிகள் தங்கள் பயணம் முழுவதும் பாதுகாப்பாகவும் வசதியாகவும் உணர வேண்டுமானால் அதற்காக அரசும் சில முடிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கூறிவருகின்றனர். 


மேலும் படிக்க | திடீர்ன்னு இப்படி செய்யாதடா! ஹார்ட் அட்டாக் வந்திரும்! மியாவ் பூனையை மிரள வைத்த வெளவால்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ