ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மற்றும் தி.மு.க தலைவர் கருணாநிதி கடந்த ஜூலை 27 ஆம் நள்ளிரவில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். தொடர்ந்து சிகிச்சை ஏற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானார். 


கருணாநிதியின் உடல் தற்போது  ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.