தன்னை குறித்து தகவல்களை தெரிந்து கொள்வதற்காக நடிகை கீர்த்தி சுரேஷ் இணையதள பக்கம் ஒன்றை புதிதாக தொடங்கியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை கீர்த்தி சுரேஷ். குழந்தை நட்சத்திரமாக நடிக்கத்துவங்கிய இவர் தற்போது தமிழ் சினிமாவில் 
சிறந்த நடிகைகளில் ஒருவராக உள்ளார். தமிழில் நடிகை கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. 


விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். தற்போது இவர் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக ‘சாமி ஸ்கொயர்’ படத்திலும், நடிகர் விஷாலுக்கு ஜோடியாக ‘சண்டக்கோழி 2’ படத்திலும் நடித்து வருகிறார். மேலும் தற்போது 2வது முறையாக தளபதி 62 என்ற படத்தில் நடிகர் விஜய்யுடன் மீண்டும் இணைந்து நடித்து வருகிறார். இதைத்தவிர இவர் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்த நடிகை சாவித்திரியின் வாழ்கை வரலாற்றில் சாவித்ரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படம் நடிகையர் திலகம் என்ற பெயரில் தமிழிலும், மகாநதி என்ற பெயரில் தெலுங்கிலும் உருவாகியுள்ளது.


இந்நிலையில், தன்னை குறித்து தகவல்களை ரசிகர்கள் தெரிந்து கொள்வதற்காக ஒரு https://www.keerthysuresh4us.com என்ற புதிய இணயதளம் ஒன்றை தொடங்கியுள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.