4 நாட்கள் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையின் முதல் நாளான நேற்று பெரும்பொங்கள் திருவிழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. ஜனவரி 14 செவ்வாய்க்கிழமை தொடங்கிய இந்த திருவிழா தென்னிந்தியாவில் அருவடை திருநாளாகவும் கருதப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் பொங்கல் திருநாளை உலகு எங்கிலும் உள்ள தமிழ் மக்கள் நேற்றைய தினம் சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.இதுபோன்ற சூழ்நிலையில், சமீபத்தில், புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி இதுபோன்ற ஒரு கொண்டாட்டத்தின் நடனத்தின் வீடியோ ஒன்றினை பகிர்ந்துள்ளார், இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


இந்த வீடியோவில் நீங்கள் காணக்கூடியது போல, ஒரு அம்மா பொங்கலின் மகிழ்ச்சியில் பெரிதும் இறங்கி நடனமாடுகிறார். இந்த வீடியோவிற்கு அவர் "இந்த வீடியோ PWD துறை, நகராட்சி மற்றும் துப்புரவு கழகத்தின் துப்புரவாளர்களின் பொங்கல் கொண்டாட்டங்களிலிருந்து வந்தது" என்று தலைப்பிட்டுள்ளார். இந்த வீடியோவில், ஒரு துப்புரவு தொழிலாளி அம்மா அற்புதமான நடனம் செய்கிறார். 



இன்னும் பல பெண்கள் அவர்களுடன் மகிழ்ச்சியின் நடனம் ஆடுகின்றனர். "இதுவரை மக்கள் பலர் பகிர்ந்துள்ள இந்த வீடியோ பலர் மனதை கொள்ள கொண்டுள்ளது எனலாம். 


மற்றொரு ட்வீட்டில், புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, "பொங்கலை நோக்கி, நகராட்சி மற்றும் PWD தொழிலாளர்களுக்கு துண்டுகள் மற்றும் புடவைகள் வழங்கப்பட்டன. இது பொங்கல் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இருந்தது," என குறிப்பிட்டுள்ளார்.


புதிய பயிரின் மகிழ்ச்சியைக் கொண்டாடும் ஒரு பண்டிகை பொங்கல் என்றும், 4 நாட்கள் நீடிக்கும் இந்த திருவிழா ஜனவரி 14 ஆம் தேதி 'போகி பொங்கலில்' தொடங்கி ஜனவரி 15 அன்று முக்கிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று மாட்டு பொங்கல் (ஜனவரி 16-ஆம்) தேதியும், ஜனவரி 17-ஆம் தேதி கத்யா பொங்கலும் கொண்டாடப்பட உள்ளது.