புதுடெல்லி: சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், இன்ஸ்டாகிராமில் செய்த ஒரு பதிவு பெரும் புயலை கிளப்பியது.சமூக ஊடகத்தில் செய்த பதிவுக்காக,  பெரிதும் ட்ரோல் செய்யப்பட்டார் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்.  காலிஸ்தானிய பயங்கரவாதி ஜர்னைல் சிங் பிந்த்ரான்வாலேவிற்கு ‘அஞ்சலி’ செலுத்தி, அவரை புகழ்ந்து போடப்பட்ட பதிவு பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதை அடுத்து ட்விட்டரில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ஹர்பஜன், திங்களன்று, இது குறித்து ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் தனது பதிவு கவனிக்காமல் அவசரமாக பதிவு செய்யப்பட்டதாகவும், அது தனக்கு வாட்ஸ் அப்பில் கிடைத்த தகவல் அது என்றும் தெளிவுபடுத்தினார். இந்தியாவுக்கு எதிரான எதையும் தான் ஆதரிக்கவில்லை என்று அவர் மேலும் கூறினார். 



"நேற்று நான் பதிவிட்ட ஒரு இன்ஸ்டாகிராம் பதிவை தெளிவுபடுத்தவும் மன்னிப்பு கேட்கவும் விரும்புகிறேன். இது ஒரு வாட்ஸ்அப் தகவல் வந்தது. அதனை முழுமையாக கவனிக்காமல்,  உள்ளடக்கம் எதைக் குறிக்கிறது என்பதை உணராமல் அவசரமாக பதிவிட்டு விட்டேன். நான் செய்தது தவறு தான், எந்த நிலையிலும், நான் பகிர்ந்த அந்த கருத்துக்களுக்கு எனக்கு எந்த விதத்திலும் உடன் பாடு இல்லை. நான் ஒரு போது, இந்தியாவிற்கு எதிரான கருத்துக்களை ஆதரிக்க மாட்டேன், ”என்று ஹர்பஜன் ட்வீட் செய்துள்ளார். 


ALSO READ | MS Dhoni: ராஞ்சியில் உள்ள தல தோனியின் பங்களாவிற்கு ஒரு ரவுண்ட் போகலாமா..!!


“நான் ஒரு சீக்கியர், நான் இந்தியாவுக்கு ஆதரவாக இருக்கும் சீக்கியன். எதிராக அல்ல. எனது தேசத்தின் உணர்வுகளை புண்படுத்தியதற்கு இது எனது நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன். உண்மையில் எனது நாட்டிற்கு எதிரான எந்தவொரு தேச விரோத அமைப்பையும், குழுவையும் நான் ஆதரிக்கவில்லை, ஒருபோதும் அவ்வாறு செய்ய மாட்டேன். நான் 20 ஆண்டுகளாக இந்த நாட்டிற்காக எனது இரத்தத்தையும் வியர்வையையும் கொடுத்துள்ளேன், இந்தியாவுக்கு எதிரான எதையும் ஒருபோதும் ஆதரிக்க மாட்டேன், ”என்று அவர் மேலும் கூறினார்.


ஐபிஎல் 2021 விளையாட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ((KKR) அணி சார்ப்பாக  ஹர்பஜன்  விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | ‘Any tips sir’: தல தோனி டிவிட்டரில் கொடுத்த கிண்டல் பதில் வைரலாகி வருகிறது


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR