இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா இருவரும் கடந்த 11-ம் தேதி இத்தாலியில் திருமணம் செய்து கொண்டார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதையடுத்து, இத்தம்பதியருக்கு இரண்டு இடங்களில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளனர். அதன்படி இன்று (21-ஆம் தேதி) டெல்லியிலும், 26-ஆம் தேதி மும்பையிலும் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. 


அதன்படி இன்று டெல்லியில் உள்ள தாஜ் டிப்ளமோடிக் என்ங்க்ளேவின் டார்பார் ஹாலில் வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏறக்குறைய 1000 விருந்தினர்களுக்கான அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


முதல் டெல்லியிலும் இரண்டாவது மும்பையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. மும்பை வரவேற்பு நிகழ்ச்சி முடிந்த பிறகு இருவரும் தேனிலவுக்கு வெளிநாடு போக உள்ளனர் என தகவலும் கிடைத்துள்ளது. 



முன்னதாக நேற்று, இந்திய பிரதமரை சந்தித்த விராட் தம்பதியர் ஆசீர்வாதம் பெற்றனர். பின்னர் இன்று டெல்லியில் நடைபெற உள்ள வரவேற்பு நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தனர்.