விராட் கோலியின் குழந்தை பருவ புகைப்படத்துடன் அவரது சகோதரி ரக்ஷபந்தன் வாழ்த்து தெரிவித்துள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட்கோலி ரக்ஷ்சாபந்தன் திருநாளில் தனது சகோதரி பவுனா கோலிக்கு தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக வாழ்த்து தெரிவித்தார்.


இந்த பதிவுக்கு பதில் அளித்துள்ள அவரது சகோதரி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது...



"எத்தனை தூரத்தில் இருந்தால் என் சகோதரர்கள் விராட், விகாஷ் கோலியின் மீதான பாசம் என்றும் குறையாது. என் வாழ்வின் தூண் அவர்கள்" என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.


கோலி பகிர்ந்துள்ள இந்த புகைப்படத்தில் மேசையின் மீது கோலியும், அவரது சகோதரியும் அமர்ந்து கோக் வெட்டி மகிழ்ச்சியாக இருப்பது போல் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் இருவரது பின்னால் அவரது தாயார் நின்றுக்கொண்டு இவர்களை கவணித்து வருகின்றார். கோலியின் குழந்தைக கால புகைப்படமான இந்த புகைப்படம் தற்போது அவரது ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.