நோய்த்தொற்றில் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்காக பயன்படுத்தப்படும் மாஸ்குகளை பாதுகாக்க பாதுகாவலரை போட வேண்டும் நிலைமை வந்துவிடும் என்று தோன்றுகிறது. இது என்ன புதுக்கதை என்று தோன்றுகிறதா? கொல்கத்தாவில் தொழிலதிபர் ஒருவர் 5.70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க முகக்கவசத்தை வாங்கியுள்ளார். இந்த செய்தி தற்போது வைரலாகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொல்கத்தாவில் சந்தன் தாஸ் என்ற நகைக்கடைக்காரர், 108 கிராம் எடை தங்கத்தில் இந்த ஸ்பெஷல் மாஸ்க்கை தயாரித்துள்ளார். இதன் மொத்த செலவு 5.70 லட்சம் ருபாய் என்று அவர் தெரிவிக்கிறார்.


மேற்கு வங்க மாநிலத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தைச் இந்த நகைக்கடைகாரரின் புதிய மாஸ்குக்கு வரவேற்பும் இருக்கிறதாம். கோவிட்-19 பரவல் குறைந்துவிட்டாலும், முகக்கவசங்கள் அணிவது வழக்கமாகிவிட்டதால், பாதுகாப்பு கவசம் என்ற நிலையில் இருந்து ஆபரணம் என்ற நிலைக்கு மாஸ்க் சென்றுக் கொண்டிருக்கிறது என்று தோன்றுகிறது.


கழுத்தில் செயில், விரல்களில் மோதிரம் போல், வாய்க்கு முகக்கவசம் என்பது இனி தங்கத்தில் அணியலாம் என செல்வந்தர்களை நினைக்க வைக்கத் தூண்டும் புதிய உத்தி இதுவாகவும் இருக்கலாம்.


ALSO READ | சூரத்தில் வைரங்கள் பதித்த மாஸ்க் விற்பனை


மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பட்ஜ் நகரத்தைச் சேர்ந்த சந்தன் தாஸ் என்ற நகைக்கடைக்காரர் பிரத்யேகமான டிசைனில் நகைகளை வடிவமைப்பதில் நிபுணர். இந்த தங்கக் கவசம் 15 நாட்களில் உருவாக்கப்பட்டது என்றும் சந்தன் தாஸ் கூறுகிறார்.


 கடந்த மாதம் கொல்கத்தாவில் நடந்த துர்கா பூஜை கொண்டாட்டத்தின் போது, ​​தொழிலதிபர் தங்க முகக்கவசத்தை அணிந்துக் கொண்டு பூஜைகளுக்குச் சென்றார். ஆனால் சுற்றியுள்ள மக்கள், இந்த புதுவிதமான முகக்கவசத்தை பார்ப்பதற்காக அவரை சுற்றிக் கொண்டதால், அதை கழற்றி வைத்துவிட்டார்.


நகைகள் மீது தனக்குப் மோகம் இருப்பதால், கழுத்தில் பல தங்கச் சங்கிலிகள், இரு கைகளிலும் பல மோதிரங்கள், கையில் பிரேஸ்லெட் என தங்க நகைகளை அணிந்துக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். 


முகக்கவசத்தின் புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்து கொண்ட பத்திரிகையாளர் ரிதுபர்ணா சாட்டர்ஜி  "இதன் நோக்கம் என்ன?" என்ற கேள்விகளை எழுப்புகிறார். 




"நோயினால் உயிர் இழந்த ஆயிரக்கணக்கானோரைப் பற்றி எந்தவித உணர்வும் அல்லது அக்கறையும் இல்லாமல் தொடர்ந்து கொச்சையாக தங்கள் செல்வச் செழிப்பை வெளிப்படுத்துவது சரியா" என்பது போன்ற பல கருத்துகள், இந்த பதிவுக்கு பதிலிட்டுள்ளனர். 


மற்றொரு பயனர், "எதிர்கால சந்ததியினருக்கான நினைவுப் பரிசாக மட்டுமே இருக்கும். நாம் தொற்றுநோயைக் கடந்து சென்றோம் என்பதற்கான ஆதாரம்!!! இந்த தங்கக் கவசத்தால் எந்தப் பயனும் இல்லை. இது கோவிட் வைரஸுக்கு எதிராக எந்தப் பாதுகாப்பையும் அளிக்காது" என்று எழுதியுள்ளார்.


ஒருவர் தங்க முகக்கவசத்தை பயன்படுத்துவது முதல் முறை அல்ல. கடந்த ஆண்டு, மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், 2.89 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 55 கிராம் தங்க முகக்கவசத்தை வாங்கினார்.


READ ALSO | வைரலாகும் மாஸ்க் பரோட்டா விழிப்புணர்வு வீடியோ


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR