மீண்டும் ஒருமுறை மக்களின் மனதை கொள்ளையடித்த லடாக் MP ஜம்யாங்!
காஷ்மீர் விவகாரத்தில் பல ஆண்டுக்காலமாக அமைதி காத்து வந்த அரசியல் கட்சிகளுக்கு மத்தியில் 2 -வது முறையாக பதவியேற்ற மோடி தலைமையிலான மத்திய அரசு செய்தது.
காஷ்மீர் விவகாரத்தில் பல ஆண்டுக்காலமாக அமைதி காத்து வந்த அரசியல் கட்சிகளுக்கு மத்தியில் 2 -வது முறையாக பதவியேற்ற மோடி தலைமையிலான மத்திய அரசு செய்தது.
காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு, ஜம்மு - காஷ்மீர் பகுதியை இரண்டு யூனியன் பிரதேசமாக அறிவித்தது. எதிர்கட்சிகளின் கடுமையான அமளிக்கு மத்தியில் இரு அவைகளிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
எதிர்க்கட்சிகள், இது காஷ்மீர் மக்களின் உரிமையைப் பறிக்கும் செயல் என கடுமையாக விமர்சிக்க, லடாக் தொகுதியின் பாஜக எம்.பி ஜம்யாங் செரிக் நம்கியால், இந்த மசோதா குறித்து பேசினார்.
மக்களவையில் அவர் அளித்த உரை, ஒரே நாளில் அவரை பிரபலம் அடையச்செய்தது. எதிர்க்கட்சியினரைப் பார்த்து, "இங்கு இருக்கும் உறுப்பினர் பலரும் காஷ்மீர் குறித்தும் லடாக் குறித்தும் பேசுவது மிக்க மகிழ்ச்சி. ஆனால், எனக்குத் தெரிய வேண்டியதெல்லாம் ஒன்றுதான். லடாக் பகுதியைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?" என அவர் கேட்ட கேள்வி மக்களவையினை அமைதியாக்கியது.
காஷ்மீரின் ஒரு பகுதியான லடாக்கில் தங்களின் வளர்ச்சி, அடையாளம், மொழி என அனைத்தையும் இழந்தோம். எல்லாவற்றுக்கும் சட்டப்பிரிவு 370-ம், காங்கிரஸ் கட்சியும்தான் காரணம்.
ஜம்மு - காஷ்மீரில் இருக்கும் மாநிலக் கட்சிகள் என்றேனும் லடாக் குறித்தோ, லடாக்கிய மக்கள் குறித்தோ பேசி இருக்கிறீர்களா? லடாக்கின் லே பகுதியிலிருக்கும் மாவட்ட நிர்வாகிகள் எங்களுக்கு தனி யூனியன் பிரதேசம் வேண்டும் என அறிக்கைகள் சமர்பித்தபோது, அவர்களைக் கட்சியைவிட்டு நீக்கிய கட்சிகள் தான் PDPயும், ஜம்மு - காஷ்மீர் நேஷனல் கான்பிரன்ஸும். இப்போது அவர்கள் எந்த முகத்தை வைத்துக்கொண்டு ஜனநாயகம் பற்றிப் பேசுகிறார்கள் என ஜம்மு காஷ்மீர் கட்சிகளின் சாயத்தை மக்களவையில் வெளுத்தார். அவரது பேச்சு இந்தி தெரியாத மாநிலங்களிலும் பிரபலமானது. யார் இந்த இளைஞன் என அனைவரையும் கேள்வி கேட்க வைத்தது.
இந்நிலையில் தற்போது சட்டப்பிரிவு 370 பின் வாங்கப்பட்டதை கொண்டாடும் விதமாக லடாக் மக்களவை உறுப்பினர் ஜம்யாங் செரிக் நம்கியால் மூவண்ணக் கொடி ஏந்தி நடனமாடியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.