Gujarat Lucky Car Video : குஜராத்தில் இருக்கும் அமெரிலி மாவட்டத்தில் வித்தியாசமான இந்த சம்பவம் நடந்தேரியிருக்கிறது. இவர்கள், தங்களின் லக்கியான காரை புதைப்பதற்காக பெரிய விழாவே எடுத்திருக்கின்றனர். இதில் ஆயிரக்கணக்காணோர் கலந்து கொண்டும் இருக்கின்றனர். 


காருக்கு அடக்கம்..

 

குஜராத்தின் அமெரெலி மாவட்டத்தில், ஒரு விவசாய குடும்பம் வாழ்ந்து வருகிறது. இவர்கள், 12 வருடங்களுக்கு முன்பு Wagon R காரை வாங்கியிருக்கின்றனர். இந்த காரை இவர்கள், சமீபத்தில் அடக்கம் செய்திருக்கின்றனர். இதை அந்த ஊரே பார்க்கும்படி திருவிழாவாகவும் எடுத்து வைத்திருக்கின்றனர். 

 

அந்த விவசாய குடும்பத்தின் தலைவரான போலாரா, அவரது குடும்பத்துடன் இந்த சடங்கை தனது நிலத்தில் செய்திருக்கிறார். கடந்த வியாழக்கிழமை அன்று (நவம்பர் 7) பல புரோகிதர்களை வரவழைத்து இந்த நிகழ்ச்சியை அவர்கள் நடத்தி இருக்கின்றனர். இதைக்காண 1500க்கும் மேற்பட்ட மக்கள் வருகை புரிந்திருக்கின்றனர். 

 

வைரல் வீடியோ..

 

அடக்கம் செய்யப்படும் கார், பூக்களாள் அலங்கரிக்கப்பட்டு ஊரில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நிலத்தை வந்தடைந்தது. அந்த காருக்கும் சொந்தக்காரர்கள் அதனை பச்சை நிற துணியால் போத்தி மூடி வைத்திருந்தனர். மேலே ரோஜா இதழ்களையும் தூவி வைத்திருந்தனர். 


 

இந்த காரை 15 அடி குழியில் வைத்த ஜேசிபி வாகனம், அதன் மீது மன்னை போட்டு மூடுகிறது. இதனை, போலாரா குடும்பத்தினர் உட்பட அங்கு கூடியிருந்த அனைவரும் போட்டோ, வீடியோ எடுத்தனர். 

 

இது குறித்து அந்த காருக்கு சொந்தக்காரர் பேசுகையில், இந்த காரை தான் 12 வருடங்களுக்கு முன்பு வாங்கியதாகவும், தன் தொழில் சிறக்க, குடும்பம் திழைக்க அதிர்ஷ்ட காரணமாக இருந்த வாகனம் இது என்றும் கூறியிருக்கிறார். அதற்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த சடங்கை தான் செய்ததாக அவர் தெரிவித்திருக்கிறார். இந்த சடங்கிற்கான செலவு மட்டும் சுமார் 4 லட்சம் செலவு செய்திருக்கிறார் அந்த மனிதர். 

 



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ