வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாய்கள் மிகவும் விரும்பப்படும் செல்லப்பிராணிகள். நாய்கள் மனிதனின் சிறந்த நண்பர்களாக பார்க்கப்படுகின்றன. வீட்டில் நாய் உள்ளவர்கள் அவற்றையும் வீட்டின் உறுப்பினர்களாகவே பார்க்கிறார்கள். நாய்களும் வீட்டில் உள்ள நபர்களுடன் அளவு கடந்த பாசத்துடன் நடந்துகொள்கின்றன. சமூக ஊடகங்களில் நாய்களின் பல வீடியோக்கள் தினம் தினம் பகிரப்படுகின்றன. இவற்றுக்கு இணையவாசிகளிடம் அதிக வரவேற்பும் கிடைக்கின்றன. இருப்பினும் பொதுவாகவே விலங்குகளிடம் மிகவும் எச்சரிக்கையாகவே இருப்பது நல்லது. நாய்களும் அது போலவே.


செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்களில் மிகவும் ஆபத்தான வகைகளில் பிட்புல் ஒன்றாகும். கேட்டால் மனம் பதபதைக்கும் பல சம்பவங்கள் இந்த வகை நாய்களால் நடந்துள்ளன. சமீபத்தில் பிட்புல் நாய் தொடர்பான ஒரு வீடியோ வெளிவந்துள்ளது. ஆனால், அதிர்ஷ்டவசமாக இதில் பிட்புல்லின் கட்டுப்படுத்தப்பட்ட கோவம் தான் வெளிவருகிறது.


வீடியோவில் ஒரு சிறுவனின் விளையாட்டுத்தனத்தையும், அதற்கு பிட்புல் நாய் காட்டும் ரியாக்‌ஷனையும் காண முடிகின்றது. இதை பார்த்தால் ஒரு பக்கம் வேடிக்கையாக இருந்தாலும், நாயின் கோவம் வந்த வேகத்திலேயே அடங்கிப்போனதை நினைத்து நிம்மதியும் ஏற்படுகின்றது.


நாய்கள் இயற்கையில் மிகவும் அமைதியானவை, ஆனால் பிட்புல்ஸ் மிக விரைவில் ஆக்ரோஷமாக மாறும். பிட்புல் வகை நாய்க்கு கோவம் வந்துவிட்டால் முன்னால் இருப்பவரை ஒரு வழி பார்க்காமல் விடாது. தற்போது வெளியாகியுள்ள வீடியோவிலும் மிகவும் அதிர்ஷ்டவசமாக பிட்புல் நாயிடமிருந்து ஒரு குறும்புக்கார சிறுவன் தப்பி விடுகிறான். 


நாயிடம் குறும்பு செய்யும் சிறுவன் 


அதிர்ச்சியூட்டும் இந்த வீடியோவில், ஒரு அப்பாவி சிருவன் பிட்புல் நாயுடன் குறும்பு செய்வதை காண முடிகின்றது. சிறுவனின் கையில் ஒரு காலி தண்ணீர் பாட்டில் உள்ளது. அதை வைத்துக்கொண்டு அவன் விளையாடிக்கொண்டு இருக்கிறான். அங்கு நிற்பவர்கள் மீது அவன் அந்த பாட்டிலை கொண்டு தட்டிக்கொண்டிருக்கிறான். அப்படியே பிட்புல் நாயின் மீதும் காலி பாட்டில் கொண்டு சிறுவன் தட்டுகிறான். 


மற்றவர்கள் மீது தட்டுவதை விட நாய் மீது தட்டுவது சிறுவனுக்கு இன்னும் பிடித்திருக்கிறது. குழந்தைகளுக்கு விலங்குகளை பிடித்திருப்பது சகஜமான விஷயம். சிறுவன் இப்படி ஒரு முறை தட்டும்போது நாய் அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஆனால், பின்ன்ர் மீண்டும் வந்து நாயின் தலை, முதுகு என அனைத்து இடங்களிலும் சிறுவன் அடிக்கவே நாய்க்கு கோவம் வந்து விடுகிறது. அது கோவப்பட்டு சிறுவன் பக்கம் திரும்பி அவன் பின்னால் செல்ல முற்படுகிறது. ஆனால், அதற்குள் நாயின் உரிமையாளர் அதை பிடித்து நிறுத்துகிறார்.


மேலும் படிக்க | கில்லாடி கிளிகள்... ஒலிம்பிக் போட்டிக்கு இவற்றை அனுப்பினால் பதக்கம் நிச்சயம்!


ஓடியே போன சிறுவன்


இதை சற்றும் எதிர்பாராத சிறுவன் பயந்து அடித்துக்கொண்டு ஓட்டம் பிடிக்கிறான். அந்த நாயை பின்னால் திரும்பி பார்த்துக்கொண்டே சிறுவன் வெகு தூரம் ஓடி விடுகிறான். குறும்பு செய்த சிறுவன் இப்படி விட்டால் போதும் என ஓடுவதை பார்க்க வேடிக்கையாக இருக்கிறது. மேலும், நாயால் சிறுவனுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்பதும் நிம்மதி அளிக்கின்றது. 


வேடிக்கையும் நிம்மதியும் கலந்த அந்த வீடியோவை இங்கே காணலாம்:



ஒரு நொடியில் மாறிய நாயின் மனநிலை


வீடியோவை பார்த்தால் ஒரே நொடியில் நாயின் மனநிலை மாறியதை புரிந்துகொள்ள முடிகின்றது. முதலில் சிறுவனின் விளையாட்டை ஜாலியாக எடுத்துக்கொண்ட நாய், சிறுவன் மீண்டும் மீண்டும் அடிக்கத் தொடங்கவே ஆக்ரோஷமானது. பிட்புல் நாய் கோபமடைந்து குழந்தையை தாக்க முயற்சிப்பதை வீடியோவில் காணலாம். இப்படிப்பட்ட ஆபத்தான விலங்குகளிடமிருந்து பெற்றோர் குழந்தைகளை விலக்கியே வைக்க வேண்டும். விலங்குகள் எப்போது எப்படி நடந்துகொள்ளும் என கூறுவது கடினம். 


வீடியோ வைரல் ஆனது


இந்த வீடியோ சமூக ஊடக தளமான ட்விட்டரில் @crazyclipsonly என்ற பக்கத்தில் பகிரபட்டுள்ளது. இதற்கு இதுவரை 25 மில்லியனுக்கும் அதிகமான வியூஸும் ஏகப்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன. ஜூலை 4 அன்று வீடியோ வெளியிடப்பட்டது. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். கோவத்திற்கு பெயர்போன பிட்புல் நாயிடம் குழந்தையை விளையாட விட்ட பெற்றோரை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். 


(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)


மேலும் படிக்க | நடு ரோட்டில் சிறுவன் ஆடிய ஆட்டம்.... சான்சே இல்ல: சொக்கிய நெட்டிசன்கள், வீடியோ வைரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ