பொதுவாக வீட்டிலுள்ள பெரியவர்களை விடவும் குழந்தைகள் தான் நமது வீட்டில் வளர்க்கும் வளர்ப்பு பிராணிகளிடம் பாசமாக இருக்கும், சில குழந்தைகள் வளர்ப்பு பிராணிகளை பார்த்து பயப்படும் ஆனால் போக போக அவற்றுடன் பழகி நண்பர்கள் போல மாறிவிடும்.  குழந்தைகள் மற்றும் விலங்குகள் சேர்ந்து செய்யும் குறும்புத்தனமான பல சம்பவங்களை நாம் இணையங்களில் பார்த்து ரசித்திருக்கிறோம் , சில விலங்குகள் குழந்தைகளுக்கு பாதுகாவலர் போல செயல்படும், சில விலங்குகள் குழந்தைகளுக்கு நண்பர் போலவும் சில சமயம் தாய் அரவணைத்து கொள்ளும் விதமான பல காட்சிகளை கண்டு நெஞ்சம் நிறைந்திருக்கிறோம்.  இப்போது ஒரு சிறுமி அதன் பூனைக்கு எப்படி Treadmill-ல் பயிற்சி செய்ய வேண்டும் என சொல்லிக்கொடுக்கும் க்யூட்டான வீடியோ பலரையும் கவர்ந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Viral Video: கருநாகத்தை கடித்து குதறிய கீரி; சின்னாபின்னமான பாம்பு!


ட்விட்டரில் யோக் என்கிற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டிருக்கும் அந்த வைரல் வீடியோவில் ஒரு சிறுமி Treadmill-ல் ஏறி நிற்ப்பதையும், அதனருகில் ஒரு பூனை அமர்ந்திருப்பதையும் பார்க்க முடிகிறது.  இருவரும் அங்கு என்ன செய்கிறார்கள் என்று பார்த்தால் அந்த சிறுமி பூனைக்கு Treadmill-ல் எப்படி பயிற்சி செய்வது என்று சொல்லி கொடுத்துக்கொண்டிருக்கிறாள்.  முதலில் சிறுமி Treadmill-ல் ஏறி நின்று சறுக்கிக்கொண்டே வருகிறார், பின்னர் Treadmill-ல் ஓடிக்கொண்டே சறுக்கி வருகிறார்.  அடுத்த முறை சறுக்கி வரும்போது சிறுமி கீழே விழுந்துவிட பூனை அந்த Treadmill-ல் கைவைத்து பார்க்கிறது.  பின்னர் மீண்டும் சிறுமியும் பூனையும் உற்சாகமாக Treadmill-ல் நடந்து விளையாடுகின்றனர்.


 



இந்த வீடியோவில் சிறுமியின் செய்கையும், பூனையின் செய்கையும் பல நெட்டிசன்களையும் கவர்ந்து இருக்கிறது.  நகைச்சுவையாகவும், ரசிக்கும்படியாகவும் இருக்கும் இந்த வீடியோ பல்லாயிரக்கணக்கான பார்வைகளையும், லைக்குகளையும், கமெண்டுகளையும் பெற்று வைரலாகி வருகிறது.


மேலும் படிக்க | சேவலை வம்பிழுத்ததால் வந்த சேதாரம்: வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வைரல் வீடியோ 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ