ஒரு மாதம் கழித்து இலங்கை வந்த Losliya தந்தையின் சடலம்!
முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரும் நடிகையுமான லாஸ்லியாவின் தந்தையின் சடலம் ஒரு மாதம் கழித்து இலங்கை வந்துள்ளது.
'பிக் பாஸ் 3' இன் பிரேக்அவுட் திறமை லாஸ்லியா சமீபத்தில் கனடாவில் திடீரென மாரடைப்பால் இறந்த தனது தந்தை மரியனேசனை இழந்தார், அங்கு அவர் கடந்த பத்து ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். அவரது மரணம் லாஸ்லியா ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.
இதற்கிடையில் லாஸ்லியா (Losliya Mariyanesan) தந்தையின் மரணம் தற்கொலை என்று கூட வதந்திகள் பரவியது. ஆனால், அவர் இயற்கை மரணம் தான் அடைந்தார் என்று மருத்துவர்கள் அறிவித்து இருந்தர்கள். ஆனால், கொரோனா (Coronavirus) பிரச்சனை காரணமாகவும், லாஸ்லியாவின் தந்தை வெளிநாட்டில் இறந்த காரணத்தாலும் அவரது உடல் லாஸ்லியாவின் சொந்த நாடான இலங்கைக்கு கொண்டு வர தாமதமானது.
ALSO READ | சோகத்தில் மூழ்கிய லாஸ்லியா- இப்படி ஒரு கொடுமையா?
இந்நிலையில் தற்போது கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து மரியாநேசனின் உடல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு அவரது குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
லாஸ்லியா தந்தை மரியனேசனின் (Mariyanesan) இறுதிச் சடங்கின் படங்கள் இப்போது சமூக ஊடகங்களில் ஷேர் செய்யபட்டு வருகின்றன, மேலும் மக்கள் தங்கள் இரங்கல் செய்திகளைப் பகிர்ந்து கொள்கின்றனர். அந்த புகைப்படத்தில் மரியனேசன் கருப்பு கோட் அணிந்திருந்தார்.
ALSO READ | லாஸ்லியா தந்தை மரணம் குறித்து கனடா அரசு வெளியிட்ட தகவல் இதுதான்!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR