புதுடெல்லி: காதலுக்கு கண்ணில்லை, வயதில்லை, ஜாதி மத பேதமில்லை, காதல் பணம் பார்ப்பதில்லை, காதல் வசதி பார்ப்பதில்லை என நாம் இப்படி பல வசனங்களை திரைப்படங்களில் கேட்டிருக்கிறோம். உண்மையான அன்பு மட்டுமே காதல் என காலம் காலமாக நாம் படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் கேட்டு வருகிறோம். ஆனால், இப்படிப்பட்ட வசனங்கள் சில நேரங்களில் நிஜ வாழ்க்கையிலும் சரியாக பொருந்தி விடுகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆம்!! வியக்க வைக்கும் ஒரு காதல் கதை கனடாவிலிருந்து (Canada) வெளிவந்துள்ளது. இங்கு இரண்டு இதயங்களில் இருந்த காதல் நிறைவேற 70 ஆண்டுகள் ஆனது. ஆனால் இறுதியில் அவர்கள் தங்கள் இலக்கை அடைந்தனர்.


ஃபிரடெரிக் பால் மற்றும் புளோரன்ஸ் ஹார்வியின் காவியக் காதல்


ஆம்! இந்த கனேடிய தம்பதியினர் திருமணம் செய்து கொள்ள 70 ஆண்டுகள் ஆனது. இந்த காதல் கதை (Love Story) இருவரும் உயர்நிலைப் பள்ளியில் படித்தபோது 1950 இல் தொடங்கியது. பால் மற்றும் ஹார்வரி இருவரும் ஒருவரையொருவர் காதலித்தனர். இருப்பினும், இந்த காதலில், ஐந்து ஆண்டுகளிலேயே ஒரு இடைவெளி வந்தது.


பால் திரும்பினார், ஹார்வியைக் காணவில்லை


சிபிசியில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி, 1995 இல் பால் வேலைக்காக டோரெண்டோவுக்குச் சென்றார். அங்கு, அவர் வேலை செய்யத் தொடங்கினார். ஆனால் அங்கு அவருக்கு கொஞ்சம் பண பற்றாக்குறை ஏற்பட்டது. இந்த நேரத்தில், பாலுக்கு அவரது நண்பர் மற்றொரு வேலையை வழங்கினார். சிறிது பணம் சேர்த்துவிட்டு அவர் திரும்பி வந்தபோது, ஹார்வி சொந்த ஊரை விட்டு வெளியேறியிருந்தார்.


ALSO READ:விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டேவின் ‘லைகர்’ 1st look வெளியீடு!


கொரோனா காலத்தில் திருமணம் செய்து கொண்டனர்


சில காலம் கழித்து இருவரும் வெவ்வேறு நபர்களை மணந்தனர். பால் தனது மனைவியை 84 வயதிலும், ஹார்வி தனது கணவரை 81 வயதிலும் இழந்தனர். 65 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் மீண்டும் ஒரு ரீயூனியனுக்காக தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பினர். இருவருக்கும் இந்த சந்திப்பு மகிழ்ச்சியை அளித்தது.


அதன் பிறகு இருவரும் பேசத் தொடங்கினர். அவரவர் வாழ்க்கையைப் பற்றிய விஷயங்களை பகிர்ந்துகொண்டனர். பல மாதங்கள் தொடர்ச்சியான தொலைபேசி உரையாடல்களுக்குப் பிறகு, இருவரும் ஆகஸ்ட் 8, 2020 அன்று, கொரொனாவுக்கு (Corona) மத்தியில் திருமணம் செய்து கொண்டனர்.


இந்த திருமணத்தைப் பற்றி கூறுகையில், பால், “அவள் ஒரு தேவதை, எனக்காக சொர்க்கத்திலிருந்து பூமிக்கு வந்த தேவதை” என்று கூறினார்.


ALSO READ: China: நாயாக நடித்து மனிதனை ஏமாற்றிய எலி


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR