தெலுங்கு மொழியிலும சக்கைப்போடு போடும் `மா(Maa)`!
தமிழில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற குறும்படம் `மா(MAA)` தற்போது தொலுங்கு மொழியில் வெளியாகியுள்ளது!
தமிழில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற குறும்படம் "மா(MAA)" தற்போது தொலுங்கு மொழியில் வெளியாகியுள்ளது!
பள்ளி பருவத்தில் நிகழும் பருவ மாற்றத்தால் குழந்தைகள் அனுபவிக்கும் எதார்த்த வாழ்வினை திரையில் காண்பித்த தமிழ் குறும்படம் "மா". குழந்தைகள் எப்படி இவ்வாறு சித்தரிக்கலாம் என, இப்படத்திற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தாலும் பலர் ஆரோக்கிய கருத்துகளை முன்வைத்தனர்.
பெரும் சர்சைகளுக்கு இடையில் இத்திரைப்படம் சுமார் 4.5 மில்லியான் பார்வையாளர்களையும் சத்தம் இல்லாமல் கடந்தது, படத்தில் நடித்த பாத்திரங்களும் பெருமளவில் பாராட்டப்பட்டனர். குறிப்பாக தாய் கதாப்பாத்திரத்தை ஏற்ற கானி குஷூர்டி அனைவரது கவனத்தையும் ஏற்றார்.
இயக்குனர் சர்ஜூன் KM இயக்க, கௌதம் வாசுதேவ் மேனனின் Ondraga Originals இக்குறும்படத்தினை வெளியிட்டது. தமிழ் மட்டும் அல்லாமல் தென் இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற இக்குறும்படத்தினை தற்போது தெலுங்கு மொழியில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்தனர்.
இந்நிலையில் இன்று இப்படத்தின் தெலுங்கு மொழி பதிப்பினை வெளியிட்டுள்ளனர்!