புதுடெல்லி: மேகிக்கு வயது வரம்பு இல்லாமல் ரசிகர்கள் இருக்கிறார்கள். கிட்டத்தட்ட அனைத்து வயதினரும் மேகியை விரும்புகிறார்கள். இதுவரை மேகியின் பல வடிவங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'தயிருடன் மேகி', 'பியருடன் மேகி' என பல வகைகளை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் இன்று இணையத்தை ஒரு கலக்கு கலக்கிய ஒரு மேகி (Maggie) வகையைப் பற்றி இந்த பதிவில் உங்களுக்கு சொல்லப் போகிறோம். 


சமூக ஊடகங்களில் மேகி லட்டு 


ஒரு பயனர் மேகி கொண்டு லட்டு செய்து அந்த புகைப்படத்தை சமூக ஊடகங்களில் (Social Media) பகிர்ந்துள்ளார். இப்போது இந்த புகைப்படம் மிகவும் வைரலாகி வருகிறது. இந்த படத்திற்கு பயனர்கள் பலவித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். 



ALSO READ: திருமண மெனுவில் Maggie: Viral ஆன போஸ்ட், வாழ்த்திய Netizens


ட்விட்டரில் (Twitter), சுகர் கப் என்ற பயனர் தனது கணக்கில் மேகி லட்டுவின் படத்தைப் பகிர்ந்துள்ளார். அந்த புகப்படத்துக்கு மேலே, தலைப்பில் அவர், "நண்பர்களே, யாரோ மேகி லட்டு செய்து ஃபேஸ்புக்கில் போஸ்ட் செய்துளார்கள்" என்று எழுதியுள்ளார். 


லட்டு செய்முறையை சொல்லவில்லை


இந்த படத்தை பார்த்த பிறகு, இந்த லட்டுவை எப்படி செய்ய வேண்டும் என அனைவரது மனதிலும் கேள்வி எழும். ஆனால் வைரலான அந்த போஸ்டில் லட்டு தயாரிக்கும் முறை பகிரப்படவில்லை. ஆனால், இந்தப் படத்தைப் பார்க்கும்போது, ​​பசையான மேகி நூடுல்சை வெல்லத்துடன் கலந்து லட்டுகள் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இருப்பினும், செய்முறை எப்படி இருந்தாலும், இந்த மேகி லட்டு குறித்து சமூக ஊடகங்களில் வரும் கமெண்டுகள் வேடிக்கையாக இருக்கின்றன. 


உங்கள் பார்வைக்கு சில கமெண்டுகள் இதோ:




ALSO READ: Bizarre challenges: 7.5 லட்சம் ரூபாய் கொடுத்தால் பாம்புகளுடன் படுக்க தயார் சவாலுக்கு இளைஞன் ரெடி


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR