மஹத் நடிப்பில் உருவாகிறது ‘கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா’!
மங்காத்தா திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர் மஹத் ராகவேந்திரா. இவர் தற்போது ‘கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா’ என்னும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
மங்காத்தா திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர் மஹத் ராகவேந்திரா. இவர் தற்போது ‘கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா’ என்னும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
வல்லவன் திரைப்படம் மூலம் திரையுலகிற்குள் நுழைந்த மஹத், ‘மங்காத்தா’, ‘ஜில்லா’ திரைப்படங்கள் மூலம் அஜித், விஜய்யுடனும் சேர்ந்து நடித்து பிரபலமானார். தெலுங்கு, தமிழ் மொழி படங்களில் துணை வேடங்களில் நடித்த மஹத், தற்போது சோலாவாக ‘கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா’ என்னும் திரைப்படத்தில் நடிக்கின்றார். இப்படத்தின் FirstLook போஸ்டரினை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தில் நடித்து வரும் மஹத், இப்படத்தினை அடுத்து தனித்து நடிக்க ஒப்பந்தமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
‘கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா’ என்று தலைப்பு வைத்திருக்கும் இப்படத்தில் மகத்திற்கு ஜோடியாக ஐஸ்வர்யா தத்தா நடிக்கின்றார். பிரபு ராம் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு தரன் இசையமைக்கிறார்.
இன்று வெளியாகியுள்ள FirstLook போஸ்டரில் சிம்பு பேனர் இடம்பெற்றுள்ளது, மேலும் மஹத் கையில் STR என சிம்புவின் பெயர் பச்சை குத்தப்பட்டுள்ளது. எனவே இப்படத்தில் மஹத் சிம்புவின் ரசிகனாக நடிக்கலாம் என தெரிகிறது. விரைவில் இப்படம் குறித்த மற்ற விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.