மலையாள திரையுலகில் கடந்த  20 ஆண்டுகளாக குணச்சித்திர நடிகையாகவும் நடிகையாகவும், மேடை நாடகங்களிலும் நடித்து வருபவர் நடிகை சஜிதா மாடத்தில். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இவர் கடந்த 2013-ஆம் ஆண்டு தான் நடித்த ஷட்டர் படத்திற்காக, சிறந்த நடிகைக்கான கேரள அரசின் விருதை பெற்றவர். மேலும் வர்ஷம், தி ரிப்போர்ட்டர், இதுதாண்டா போலீஸ், ராணி பத்மினி, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது 'கலீபா', 'கூட', மற்றும் 'சந்திரகிரி' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.


இந்நிலையில் சமீபத்தில் இவரை கார்த்தி என்கிற, துணை இயக்குனர் ஒருவர் தன்னுடைய படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்குமாறு கைப்பேசியின் மூலம் அணுகியுள்ளார். அதற்கு படத்தின் கதையை தன்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கை அனுப்பி வைக்குமாறு சஜிதா கூறியுள்ளார்.


இதைத்தொடர்ந்து அந்த துணை இயக்குனர் வழிந்தபடி, நீங்கள் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்யவேண்டும் என தெரிவித்துள்ளார்.


இதனை கேட்டதும் ஆத்திரம் அடைந்த சஜிதா அந்த இயக்குநரை கடுமையாக திட்டியதாக தெரிகிறது. 


இந்த சம்பவம் குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள சஜிதா, அந்த நபரின் எண்ணைக் பதிவிட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து இவரை வசை பாடுவதற்காக பலர் அந்த துணை இயக்குனரை தொடர்பு கொண்ட போது,  கைபேசியை அனைத்து வைத்துள்ளதாக தெரிகிறது.


நாற்பது வயதை கடந்த சஜிதா மலையாள திரையுலகை சேர்ந்த பெண்கள் நல அமைப்பில் உறுப்பினராக உள்ளார், பெண்ணியக் கருத்துகளை முன்வைத்து வரும் இவர் மலையால சினிமா பிரபலங்களை கூட தைரியமாக விமர்சித்து வருகின்றார்.


சஜிதாவின் முகநூல் பதிவு இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது...