கேரளாவில் இளைஞர் ஒருவருக்கு ஃப்ளிப்கார்ட்டில் கேமரா ஆர்டர் செய்தவருக்கு டைல்ஸ் கல் கிடைத்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேரளாவில் கன்னூரில் விஷ்ணு சுரேஷ் என்பவர் உள்ளார். இவர் 27,500 ரூபாய்க்கு கேமரா ஒன்றை ஃபிளிப்கார்ட்டில் ஆர்டர் செய்திருந்தார். இதற்கான பேமெண்ட்டை அவர் ஆர்டர் செய்த போதே கட்டியுள்ளார். வீட்டிற்கு வந்திருந்த பார்சல் மிகவும் எடை மிகுந்ததாக இருந்துள்ளது.


அந்த பார்சலை திறந்து பார்த்த போது டைல்ஸ் கற்கள் இருந்துள்ளன. அத்துடன் கேமராவை பயன்படுத்துவதற்கான வழிகாட்டி புத்தகமும், வாரண்டி கார்டும் இருந்துள்ளன. இதனால் ஆத்திரமடைந்த அவர், ஃப்ளிப்கார்ட் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டுள்ளார்.