மலையேற போனவரை தாக்க வந்த ராட்சத கரடி: திக் திக் நிமிடங்களின் வைரல் வீடியோ
மலையேற சென்றவரை திடீரென கரடி ஒன்று தாக்க வந்த வீடியோ, காண்போரை பதைபதைக்க வைக்கிறது.
இப்பொழுதெல்லாம் மலையேற்றம் செய்வது பிரபலமாகிவிட்டது. இறுக்கமான வாழ்க்கை சூழலில் வாழும் பலரும் கொஞ்ச நாள் ஓய்வெடுப்பதற்காக அல்லது வித்தியாசமான அனுபவம் பெறுவதற்காக டிரெக்கிங் செய்ய விரும்புகின்றனர். சாகச பயணமாகவும், வாழ்க்கையில் புதிய அனுபவமாகவும் இருக்கும் என்பதற்காக இதனை தேர்வு செய்கின்றனர். மேலும், இயற்கை அன்னையின் அழகியலை ரசிக்கவும், அங்கிருக்கும் சுவாரஸ்யமான படைப்புகளை பார்க்கவும் அற்புதமான வாய்ப்பாக டிரெக்கிங் இருக்கிறது.
இதற்காகவே இதனை ஐடி ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் தேர்வு செய்கின்றனர். இரவு நேரத்தில் வனப்பகுதிக்குள் தங்கி, அங்கேயே சமைத்து சாப்பிட்டு, குடில் அமைத்து அதற்கு உறங்கி எழும் அனுபவம் சொர்கத்தில் கிடைக்கும் மகிழ்ச்சியை கொடுக்கும். ஆனால்,இந்த அனுபவத்தை பெறுவது அவ்வளவு எளிதானது அல்ல. பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும்.இதற்காக நீங்கள் முன்கூட்டியே திட்டமிட வேண்டும். எப்போது செல்கிறீர்கள், அப்போது அங்கு என்ன சீதோஷண நிலை இருக்கும், நீங்கள் செல்லும் இடத்தில் வன விலங்குகள் இருக்குமா? அவை வந்தால் எப்படி தப்பிக்க வேண்டும்? எங்கு தங்குவீர்கள், உணவுக்கு என்ன செய்ய வேண்டும்? எந்தமாதிரியான உடைகள், காலணிகளை எடுத்துச் செல்ல வேண்டும் என்பது உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் மிகவும் முக்கியம்.
அப்படி சென்றீர்கள் என்றால் மட்டுமே திடீரென ஏற்படும் ஆபத்துகளில் இருந்து உங்களை நீங்கள் தற்காத்துக் கொள்ள முடியும். இணையத்தில் வைரலாகியிருக்கும் இந்த வீடியோவை நீங்கள் பார்த்தால் டிரெக்கிங் செல்ல எவ்வளவு முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது உங்களுக்கு புரியும். அந்த வீடியோவில் ஒருவர் டிரெக்கிங் சென்று கொண்டிருக்கும்போது, வனப்பகுதிக்குள் மறைந்திருக்கும் கரடி திடீரென அவரை தாக்க வருகிறது. சுதாரித்துக் கொண்ட அவர், இதனை எட்டி உதைத்து தன்னை காப்பாற்றிக் கொற்கிறார். ஒருவேளை அவர் அவ்வாறு செய்யாவிட்டால் உயிரை பலி கொடுக்க வேண்டி வந்திருக்கும். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகியிருக்கிறது.
மேலும் படிக்க | வெள்ளை நிற 10 அடி நீள பாம்பு; வைரலாகும் வினோத வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ