வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதலைகளின் பல ஆச்சரியமான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. சில நேரங்களில் அவை மனிதர்களை தாக்குவதையும், சில நேரங்களில் நீருக்கடியில் அவற்றின் விந்தையான உலகையும் நாம் இந்த வீடியோக்களில் பார்த்துள்ளோம். தற்போது வெளிவந்துள்ள ஒரு வீடியோ காண்பவர்களை கதிலகலங்க வைத்துள்ளது. இதில் முதலைகளிடம் நீண்ட நாட்களாக பழகியவர் போல் காட்சியளிக்கும் ஒருவர், முதலைக்கு உணவளிப்பதை நம்மால் காண முடிகிறது. 


வாயை திறந்து காத்திருந்த முதலை
வீடியோவில், தண்ணீர் நிரம்பிய குளத்தின் அருகே முதலையின் முன் ஒரு மனிதன் அமர்ந்திருப்பதை காண முடிகின்றது. அந்த முதலை தன் வாயை பெரிதாக திறந்துவைத்து அங்கிருந்து வெளியே வருகிறது. மறுமுனையில் இருக்கும் அந்த நபர் அந்த முதலைக்கு ஏதோ உணவு தர அழைப்பது போல் தெரிகிறது. இதனால் வெளியே வந்த முதலை தன் உணவை எடுத்துக் கொண்டு அங்கு சாப்பிடுவதை காண முடிகிறது.


வீடியோவை இங்கே காணலாம்:



இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் 'snakebytestv' என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. அதன் வீடியோ வைரலாகியுள்ளது. இதற்கு பல வித வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ