பக்ரீத் பண்டிகை முன்னிட்டு பிரதமர் மோடி பக்ரீத் பண்டிகைக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தள்ளார்..! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இறைதூதர் இப்ராஹிம் நபி தியாகத்தை நினைவு கூறும் பக்ரீத் பண்டிகை இன்று உலகம் முழுவதும் கொண்டப்படுகிறது. இறைவனின் தூதர்களாக இஸ்லாமியர்களால் நம்பப்படுபவர்களில் ஒருவர் இப்ராகிம். இவர் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய ஈராக்கில் வாழ்ந்து வந்ததார். நெடுநாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்து வந்த இவருக்கு, இறுதியில் இவரின் இரண்டாவது மனைவி ஃஆசரா மூலம் ஒரு ஆண் மகன் பிறந்தது. 
 
இஸ்மாயீல் என பெயரிடப்பட்ட அந்த குழந்தையின் வழி வந்தவர்களே இன்றைய அராபியர்கள். இஸ்மாயீல் பால்ய பருவத்தை எட்டியிருந்த பொழுது, அவரை தனக்கு பலியிடுமாறு கடவுள், இப்ராஹிமுக்கு கனவின் மூலம் கட்டளையிடுகிறார்.


இதைப்பற்றி இஸ்மாயீலிடம் கூறிய இப்ராஹிம், அவரின் அனுமதியுடன் பலியிட துணிந்தபொழுது, சிஃப்ரயீல் எனப்படும் வானவரை அனுப்பி இறைவன் அதை தடுத்தான். மேலும் ஒரு ஆட்டை இறக்கிவைத்த இறைவன், இஸ்மாயீலுக்கு பதில் அந்த ஆட்டை அறுத்து பலியிடுமாறு இப்ராஹிமிற்கு கட்டளையிட்டான். 


மேற்கூரிய இந்த சம்பவத்தின் அடிப்படையிலேயே தியாகத்திருநாள் கொண்டாடப்படுகின்றது. இப்ராஹிமின் தியாகத்தை நினைவு கூரும் வகையில், பக்ரீத் எனப்படும் ஈகை திருநாளாக இஸ்லாமியர்கள் உலகம் முழுவதும் இன்று   கொண்டாடப்படுகிறது. 


இந்த நிலையில், பக்ரீத் பண்டிகை முன்னிட்டு பிரதமர் மோடி பக்ரீத் பண்டிகைக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தள்ளார். அதில், அனைவருக்கும் பக்ரீத் பண்டிகை தின வாழ்த்துக்கள். இந்த நாள் இரக்கம் மற்றும் சகோதரத்துவ மனநிலையை நம்முடைய சமூகத்தில் ஆழப்படுத்தட்டும் என்று தெரிவித்து உள்ளார்.