நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய கேப்டன் விராட் கோலியை மூன்றாவது நடுவர் வீரேந்திர சர்மா வெளியேற்றியதை அடுத்து ட்விட்டரில் விவாதம் சூடுபிடித்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடிவருகின்றன. நல்ல தொடக்கத்திற்குப் பிறகு, இந்திய அணி மதிய உணவுக்கு சற்று முன்பு ஒன்றன் பின் ஒன்றாக மூன்று விக்கெட்டுகளை இழந்தது. 


அதில் இந்திய கேப்டன் விராட் கோலி டக் அவுட்டாகினார். அய்ஜாஸ் பட்டேலின் பந்தில் எல்பிடபிள்யூ அவுட் ஆன விராட் கோஹ்லி நான்கு பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு பெவிலியன் திரும்பினார். அவரால் கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை (Virat Kohli Angery)  என்றாலும், ஒன்றும் செய்ய முடியவில்லை. இருப்பினும், மூன்றாவது நடுவர் வீரேந்திர ஷர்மா அவரை அவுட் என்று தவறாக அறிவித்ததால் விராட்டின் அவுட் குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.


Also Read | அம்பயரின் தவறான முடிவு, கடுப்பில் மட்டையை ஓங்கி அடித்த விராட் கோலி


இப்போட்டியில்,  80 ரன்கள் எடுக்கும் வரை இந்திய அணிக்கு எந்த பின்னடைவும் இல்லை. ஆனால் நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் படேல் முதலில் ஷுப்மான் கில்லை 44 ரன்களில் வெளியேற்றினார், அதைத் தொடர்ந்து சேட்டேஷ்வர் புஜாராவும் அவுட்டானார்.


30வது ஓவரின் கடைசி பந்தில் பட்டேல் வீசிய ஆர்ம் பந்தை கோஹ்லி முன் காலால் தடுக்க முயன்றார், ஆனால் பந்து பேட்-பேடில் பட்டது. நியூசிலாந்து மேல்முறையீடு செய்ய, கள நடுவர் அனில் சவுத்ரி அவுட் என்று தீர்ப்பளித்தார்.


ரீப்ளேயில், விராட் கோலியின் மட்டையின் உள் விளிம்பில் பந்து பட்டப்பிறகு தான், காலில் உள்ள பேட்டில் பந்து தாக்கியது என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் ஆன்-பீல்ட் அம்பயர் அனில் சவுத்ரி அவுட் என கை தூக்கியது மற்றும் மூன்றாவது நடுவரின் முடிவால் கோஹ்லி அதிருப்தியடைந்தார்.



அதுமட்டுமல்ல, அம்பயரின் முடிவு குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. ட்விட்டரில், மூன்றாவது நடுவர் வீரேந்திர சர்மாவை கோஹ்லி ரசிகர்கள் வறுத்தெடுக்கத் தொடங்கினர்.



 




ALSO READ |  ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் புதிய கேப்டன் யார்?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR