‘எனக்கும் வேலை கொடுங்க’: Mercedes-Benz ஆலையில் நுழைந்த சிறுத்தையின் வைரல் வீடியோ
புனேவில் உள்ள மெர்சிடிஸ் பென்ஸ் கார் தொழிற்சாலைக்குள் சிறுத்தை நுழைந்ததால், பெரும் பரபரப்பு ஏற்பாடு, தொழிற்சாலை பணிகள் 6 மணி நேரம் நிறுத்தப்பட்டது.
புனே: புனேயில் உள்ள மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு கார் தொழிற்லையில் நேரிட்ட ஒரு அசாதாரண சம்பவத்தில், தொழிற்சாலை வளாகத்தில் சிறுத்தை நடமாடுவதைக் கண்டு, ஆலையில் பணிபுரிந்த தொழிலாளர்கள் பதறிப் போய் அலாரம் அடித்தனர்.
இதனை அடுத்து உலா வந்த சிறுத்தையை பிடிக்க, சுமார் 6 மணி நேரம் பணிகள் நிறுத்தப்பட்டதாக செய்தி நிறுவனங்கள் திங்கள்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன. வனவிலங்கு அதிகாரிகள் மேற்கொண்ட கடினமான முயற்சிகளுக்குப் பிறகு சிறுத்தை பிடிபட்டது. மகாராஷ்டிரா வனத் துறையின் குழு, சிறுத்தையை பிடிக்க 100 ஏக்கர் பரப்பளவுள்ள உற்பத்தி ஆலைக்கு வந்து சேர்ந்தனர். சிறுத்தை ஆலைக்குள் உலாவும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
சிறுத்தை மீட்பு மையத்தில் இருந்து வனவிலங்கு குழு, கால்நடை மருத்துவர்களுடன் இணைந்து, சிறுத்தையை பிடித்தது. இதற்கிடையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உள்ளூர் போலீசாரின் ஆலோசனையின் பேரில், உடனடியாக ஆலையில் இருந்த தொழிலாளர்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டனர்.
சுமார் 6 மணி நேரம் நீடித்த இந்த நடவடிக்கையில், டாக்டர் ஷுபம் பாட்டீல் மற்றும் டாக்டர் நிகில் பங்கர் அடங்கிய குழுவினர், தொழிற்சாலையில் பதுங்கியிருந்த சிறுத்தையை கண்டுபிடித்தனர். வனத்துறையினரும் மருத்துவர்களும் இணைந்து செயல்பட்டு, சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தினர். பின்னர் 11.30 மணியளவில் பிடிக்கப்பட்டது.
மேலும் படிக்க | Viral Video: அஸ்ஸாமில் சாலையை ஹாய்யாக கடந்து சென்ற பெரிய்ய்ய்ய மலைப்பாம்பு..!!
வைரலான வீடியோவை இங்கே காணலாம்:
வன அதிகாரி யோகேஷ் மகாஜன் கூறுகையில், சிறுத்தைப்புலி, ஜுன்னாரில் உள்ள ஒரு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, காடுகளுக்குள் விடப்படுவதற்கு முன்பு மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்படும். பிடிபட்ட சிறுத்தைப்புலி சுமார் 2-3 வயதுடைய ஆண் சிறுத்தை என வன விலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் படிக்க | பறவை கூட்டை தாக்கிய பாம்பு; சும்மா இருந்தா பறவை!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR